தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இத்தேர்வாணையம்
தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது.
இதன் தலைவராக இருந்த
நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக
போட்டியிடுவதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் பதவி காலியாகி 9
நாட்கள் ஆகிறது. புதிய தலைவர் நியமிக்கப்படாததால் தேர்வு முடிவு அறிவிப்பு,
புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க
முடியவில்லை. இதே போல தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகளும் காலியாக
உள்ளன. தேர்வாணை முடக்கம் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பையும்
முடக்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...