தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கூட்டணியினர், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். பள்ளிகளில் அதிகப்படியாக உள்ள பணியிட மாறுதல்களைக் கைவிட
வேண்டும், முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்துசெய்து, நேரடியான கலந்தாய்வு
முறையில் மாறுதல் ஆணைவழங்க வேண்டும், சேம நிதிக் கணக்குகளை முறைப்படுத்திக்
கணக்குச் சீட்டுவழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை
முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் தெ.ராமசாமி தலைமை
வகித்தார்.மாவட்டத் துணைத்தலைவர் என்.எழிலரசன் வரவேற்றார். மாவட்டச்
செயலாளர் எம்.காந்தி விளக்கவுரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர்
நா.சத்தியசீலன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சித்ரா, மாவட்ட
இணைச்செயலாளர் ஆர்.தேன்மொழி, முன்னாள் மாநிலச் செயலாளர்
வி.பாலசுப்பிரமணியன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர்
சொ.கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்கச்செயலாளர் மரிய.ஜெய ராஜ்,
புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ப.அந்துவன்சேரல்
ஆகியோர் உரையாற்றினர்.அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.ன்பழகன்
நிறைவுரையாற் றினார். கொள்ளிடம் வட் டாரச் செயலாளர் இரா.பாலச்சந்தர் நன்றி
கூறினார்.
Congrates sir. Amt irukavanga easya transfer vangiranga namalamarie irukavanga tha kastapadanum. Ithuku oru ful stop veika our cm mam tha help pannanum
ReplyDeleteTransfer ku eligible illathavangalam eppadi appoinment ana 6month la transfer vangitu varanga
ReplyDeleteAppointment ana 6 month la tranfer vvangaranga than y order copy la 1 year 2year ku transfer illanu podranga
ReplyDelete