Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது

         அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

        கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, இடைநிலை ஆசிரியர்களை பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

         இதற்கிடையே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், 'வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது. இந்த முறை செல்லாது. ஒவ்வொன்றிலும் விண்ணப்பதாரர்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

          இதையடுத்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், 'இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்விலும் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கட் ஆப் வந்தால்..

           இந்த தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றால், வயதில் மூத்தவர்களுக்கு (பிறந்த தேதி அடிப்படையில்) முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
15
P%
P*15/100
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
25
Q%
Q*25/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
R%
R*60/100

பட்டதாரி ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
10
P%
P*10/100
பட்டப் படிப்பு
15
Q%
Q*15/100
பி.எட்.
15
R%
R*15/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
S%
S*60/100




44 Comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Thanks paadasalai

    ReplyDelete
  3. Senioritykku mathippen valanga vendum entra

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Priority quota vendum?

    ReplyDelete
    Replies
    1. Yes we want priority.. shall we go to court

      Delete
    2. you want Army priority or any other sir please reply

      Delete
  6. எட்டு வருடங்களுக்கு முன் 75% எடுத்த ஒருவரையும் சென்ற ஆண்டு 76% எடுத்தவரையும் ஒன்றாக ஒப்பிட்டு இவருக்கே நீதி என வழங்குவது அருமை எல்லா competitive examமிலும் அவர் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே வேலை வழங்குகின்றார்கள் இது competitive exam இல்லை என்றால் ஒரு தெழிவான weightageஐ முடிவு செய்யுங்கள் ஒருவரால் மீண்டும் tetஎழுதி மதிப்பெண்ணை மாற்றிக்கொள்ள முடியும் HSC, UG, B.Edல் மதிப்பெண் குறைந்த ஒருவர் மீண்டும் மதிப்பெண்ணை கூட்ட என்ன செய்வது என்று பதில் கூறுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. First TET, then TRB is the only solution for this problem

      Delete
  7. My mum cleared tet with 100 marks..Her age is 48..she did ug in 1987 ..her weightage is 61.43 only..history major..will c get d job?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. @VIJAY KUMAR....You just enquire.... You will believe

    ReplyDelete
  11. Masi coimbatore6/05/2014 7:41 pm

    engalaukku cv la part i ii iii nnu language paperum setthuthan calculate panninanga.ncc nss um serthuthan percentge potaanga. ANY ONE TELL ME WHETHER IN UR CENTER CALCULATED IN DIFFERENT WAY. PLZ REPLY ME

    ReplyDelete
    Replies
    1. S frnd enka centrla part 1 , 2 and 3 matum tha calculate paninanga part 4 and 5 calculate panala frnd ena pandrathu

      Delete
  12. History majorla vaccant adhigama iruppadhala kidaikkunu nambikkai vainga kidaikkum All the Best by RAJ

    ReplyDelete
  13. @ Masi. Chennaila Part V callculate pannala

    ReplyDelete
  14. ada ariveketta madaynkala ithuve 1 yearkku appuram ippathan tetkku oru mudivu kidaikkapoguthu,, marupadiyum case a? ennathan panuratha utthesam konjum kuda ungalukku irakkam illaya ????? ungalukke nalla iruntha sari ethanayo per ithukaka valkaiya ilanthuttu irukkanga? ethana per wex agi irukkanga???? ethana per vaitherichal patturipanga Please dont file a case? namukku than illanalum weightage irukuranvangalavathu valattume? avargalavathu valkaiyil oru nimmathi kidaikattume?

    ReplyDelete
    Replies
    1. மடையா , உன்னை திட்டனும் போல இருந்துச்சு :))

      Delete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  16. when will announce pg trb exam for 2014

    ReplyDelete
  17. Super sir, how to improve hsc marks

    ReplyDelete
    Replies
    1. Hsc la than improvement system illayame sir.

      Delete
  18. Senioritykku mathippen vendum courttukku povom

    ReplyDelete
    Replies
    1. ennall than mudiyamal thavikkiren neengalavathu case file pannunga. so naan west Bengal ill velai parthu varukiren court kku povathu ennakku sathhiam illai so please case file pannunga.

      Delete
    2. Nenga tetla 130 edunga kidaikum .....seniority na athiga knowledge irukum la edunga dont ask seniority mark....plsss

      Delete
  19. Priority um vendum courttuku povom

    ReplyDelete
    Replies
    1. enna priority nnu sollunga nanum kalanthukolkiren

      Delete
  20. TNTET தொடரும் குழப்பங்கள்:

    .01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    1. BA/BSc மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு சான்றிதல் சரிபார்ப்பு மையத்திலும் ஒவ்வொரு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளது.

    2. UGC & NCTE வழிகாட்டி நெறிமுறைகள் MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே மதிப்பெண் சதவீதத்தைக் கணக்கிடவேண்டும் என்று கூறுகின்றது.

    3. நமது பட்டங்களும் (DEGREES/­CONVOCATION CERTIFICATES) MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே கணக்கிட்டு முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பு என வழங்கப்பட்டுள்ளன.

    4. பெரும்பாலான சென்டர்களில் மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டுள்ளன.

    5.சில சான்றிதல் சரிபார்ப்பு மையங்களில் NCC/NSS/EXTRA CURRICULAR ACTIVITIES போன்ற பாடங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை

    6. அரசு கல்லூரிகளில் BA/BCOM/MA/MSc/BEd போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் (ADMISSION) பொழுது இதுவரை MAJOR & ALLIED படிப்புகளின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

    7. கணிதம்/ அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு மொழிப்பாடங்களையும் (TAMIL / ENGLISH) சேர்த்து கணக்கிடுவதால் CUT OFF குறைய வாய்ப்பு அதிகம்.

    .01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். இது குறித்து பல்கலைகழகப் பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன் .

    நாளை ஒரு வழக்கினைப் பதிவு செய்கிறேன். வெற்றி நமதே !!!

    ReplyDelete
  21. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. எது நிரந்தரம் என்று எப்பவும் யாருக்கும் தெரியாது இதுதான் இப்போதய TET ஒவ்வொரு நாளும் புதுசு கண்ணா புதுசு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இது தான் நம்ம ஊரு TET தேர்வு

    ReplyDelete
  24. Senioritykku mark illaya

    ReplyDelete
  25. Veru vali theryavillai courtukku pogavendiyathuthan senioritykku mark vendum

    ReplyDelete
  26. Pothum da
    Ithukku mela case poduravan nasama poiruvan
    Kudumbathoda larila adi pattu savan
    Nallave irukka mattan

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  27. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  28. நீதிமன்ற தீர்ப்பிலும், அரசாணையிலும் UG % கணக்கிடும் வழிமுறையை தெளிவாக குறிப்பிடவில்லை.

    ReplyDelete
  29. In +2 most of the most of the commerce and 3rd group students secure 1000+ marks easily because of more practical marks these students join only arts group in college so due to this wtg system language trs affected.

    ReplyDelete
  30. GO எதிர்த்து வழக்கு ஏதாவது பதிவு உண்டா?

    ReplyDelete
  31. Rajendiran sir heloo ungaluku than job eruku ila adha seinga sir enaluku velai kidaika vidunga.......

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive