அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு,
தொழில்நுட்ப கல்விக்கான கலந்தாய்வில், சிறப்பு சலுகை வழங்க கோரி, வரும்
17ம் தேதி, 100 பேர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்
மாளிகை அருகில், வரும் 17ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர், தி.தேவநாதன் யாதவ் தலைமையில்,
100 பேர் பட்டினி போர் நடைபெற உள்ளது.
அரசு பள்ளியில் படித்து, தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு, தொழில் நுட்ப கல்விக்கான கலந்தாய்வில் கட்டணக் குறைப்பு,
கட் - ஆப் மார்க் குறைப்பு போன்ற சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்; அரசு
பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தி, எல்லோருக்கும் கட்டணமில்லா
தரமான கல்வியை செய்ய வேண்டும் ஆகியவை, போராட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
aatharave tharukiran
ReplyDelete