Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிகரிக்கும் 'சர்பிளஸ்': அச்சத்தில் ஆசிரியர்கள்!

          அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
             தற்போது, மாநில அளவில் 3,000 ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 'பணிநிரவல்' அடிப்படையில் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் ஆசிரியர்களிடையே ஏற்பட்டுஉள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்படுவதால், அங்கு 'சர்பிளஸ்' ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,'' என்றார்.




2 Comments:

  1. ஆசிய்ரியர் சர்பிளஸ் என்றால் ஆங்கிலபிரிவு துவக்க ஏன் அனுமதிக்கிறீர்க்ள். ஆங்கில பிரிவை மெட்ரிக் பல்ளிகளில நன்றாக் நடத்துவ்தோடு ஆசிரியரிகளிடையே பேச்சாற்றல் திறமையும் அதிகம் உள்ளது. தமிழக அரசு பள்ளியில் 2015-16 10 ஆம் வகுப்பில் தழிழ் கட்டாயம் எடுத்திருந்தால் தான் தேர்வு எழுத் முடியும் என்ற நிலையில் , சர்பிளஸ் என்ற ஒரே காரணதிற்காக டெட் தேர்வுக்கூட எழுதாத ஆசிர்ய்ர்கள் , ஆங்கிலத்தில் சரியாக எழுத்கூட தெரியாத 10% ஆசிரியர்கள் தன்னுடைய தகுதியினன் மேம்படுத்த கூட் எண்ணாமல் இருக்குறவர்கள் ஆங்கில் பிரிவு பாடம் நடத்த மூத்த ஆசிரியர்க்ள் மத்தியில் போட்டிபோட்டு ஆங்கில் வழிகற்பிக்க நினைக்கிறார்க்ள். எதனால் இப்படி செய்கிறார்க்ள் என்றால் டியூஷன் ஆங்கில்வழி மாணவ்னுக்கு கட்டாய்ம் வரவழைத்து பணத்தை கறப்பதற்காக தான். மறைமுகமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில்வழிக்கு சேர்க்கும் மாணவர்களிடம் டொனேஷ்ன் ரூ2000/- வசூலிக்கிறார்கள். தமிழ்வ்ழிக்கும் டொனேஷ்ன் ரு1000/- ஆறாம் வகுப்பிலே வசூலிக்கிரார்கள் . அரசு ஏன் விழித்து கொள்ளவில்லை. எங்க்லை போல் மெட்ரில் பள்ளிகல் சீக்குரம் மூட இப்படியா செய்வது

    ReplyDelete
  2. அம்மா பிரியங்கா,
    உங்களால் இவ்வளவுதான் பொய் புளுக முடியுமா? எந்த அரசுப்பள்ளியில் ரூ.1000/- ரூ.2000/- வசூலிக்கிறார்கள்.நீங்கள் சரியான தைரியமுள்ள மனிதனாக இருந்தால் விவரம் கொடுங்கள், அல்லது அரசுக்கு புகார் கொடுங்கள்.அதைவிடுத்து அனைத்து அரசுப்பள்ளிகளிலும் வசூல் செய்கிறார்கள் என்பது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி ஆரம்பித்ததால் உங்கள் கடைக்கு வியாபரம் படுத்துவிட்டது என்ற கிராமத்தில் ஏதோ எரிச்சல் என்பார்களே அதுதானே. உங்களால் தமிழிலே கருத்தைச் சொல்ல இயலவில்லை. இதுல மெட்ரிக் பள்ளி ஐயகோ ! நல்ல நிலையில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளை கேவலப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive