தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில்,
காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,484க்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், 2010, டிசம்பரில், அறிவிப்பு வெளியிட்டது. 2011, பிப்ரவரியில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதன் அடிப்படையில், தேர்வுப் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதோடு, காத்திருப்போர் பட்டியலையும், வெளியிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 24 பேர், நிரப்பப்படாத காலியிடங்களில், தங்களுக்கு பணி வழங்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: உரிய நேரத்தில், காலியிட விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்திருந்தால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்பியிருப்பர். சிறப்பு நேர்வாக கருதி, அரசு அளிக்கும் காலியிடங்கள் விவரங்களின் அடிப்படையில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்புவதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே ஒரு முறையாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்வதில் ஆட்சேபனையில்லை என, அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 2012, செப்., 15 முதல், 2013, ஜன., 2 வரையிலும், 352, காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த, 352, காலியிடங்களிலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, நிரப்ப வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.
PET: Political Eligibility Test should be conducted for "politicians".
ReplyDeleteEthuveraya
ReplyDelete