வங்கி கடன் மூலம் முதல்
முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி
சலுகை வழங்க மத்திய அரசு
முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதலாவது
பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வரும் 10ந் தேதி
தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக
அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து
ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட்டில்
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு
உயர்த்தப்படுமா, வரிவிதிப்பால் மாற்றம் வருமா, புதிய
அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் வங்கிக்கடன் மூலம் முதல் முறையாக
வீடு வாங்கியவர்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில்
வட்டி சலுகை வழங்க திட்டமிட்டிருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி முதல் முறையாக
வீடு வாங்குபவர்கள் வங்கியில் நேரடியாக செலுத்தும் வீடு வாங்க கூடிய
நபரின் வருமானத்தின் அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படலாம்
என்று கூறப்படுகிறது.
sir, please recommend for home mortgage loan also the tax benefit, thank you
ReplyDeleteSir. Simplify bank loan and formalities for people and govt staff--ARIVARASU
ReplyDeleteDear padasalai please guide me i have one doubt now secondary grade teachers 530 members got promotion so new vacancies are increase or not
ReplyDelete