பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, கடிதம் பெற்று,மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
அதன் விவரம்: நாளை (23ம் தேதி) முதல் 10ம் வகுப்பு உடனடி தேர்வு
துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், 19ம் தேதியில் இருந்து,
'ஹால் டிக்கெட்'டை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது.
எனினும், பல மாணவர்கள், 'ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை என்றும், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றும், தெரிவிக்கின்றனர். இப்படிபட்ட மாணவர்கள், எந்த பள்ளியில், தேர்வு கட்டணத்தை செலுத்தினார்களோ, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, 'இந்த மாணவர், தேர்வு கட்டணம் செலுத்தி உள்ளார்; உடனடி தேர்வை எழுத, தகுதி பெற்றவர்' என, கடிதம் பெற்று, அதை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது,'ஹால் டிக்கெட்'டில், ஒரு புகைப்படத்தை ஒட்டிவிட்டு, மற்றொரு புகைப்படத்தை, தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...