ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
வருவாய்த்துறையில்
காலியாக உள்ள 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, ஜூன் 14 ல் போட்டித்
தேர்வு நடக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், முறைகேடுகள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்தி முடிக்க, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் வீடியோ பதிவில் சிறப்பு ஏற்பாடுகளை
செய்துள்ளது. தேர்வு துவங்கியதில் இருந்து முடியும் வரை, ஒவ்வொரு
கட்டத்தையும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்
பிரிக்கப்படுவதில் இருந்து தேர்வு மையத்தின் எண்கள், அறிவிப்பு பலகை
எண்களையும் பதிவு செய்ய வேண்டும். பார்வையற்றோர் எழுதும் மையங்களில்,
அவர்கள் 'ஸ்கிரைப்' (சொல்வதை எழுதுபவர்) உதவியுடன் தேர்வு எழுதுவதை
அடிக்கடி பதிவு செய்ய வேண்டும். முக்கியமாக 'கேசட்' உபயோகிக்கப்படும்
வீடியோ கேமரா மட்டும் பயன்படுத்த வேண்டும். 'மெமரி கார்டு' பயன்படுத்தி
உபயோகிக்கும் கேமராக்களை பயன்படுத்தக்கூடாது, என மாவட்ட நிர்வாகங்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...