அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,போதுமான ஆங்கில அறிவு இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து ஆங்கில வழி பள்ளி
அரசு
பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில்,
2011ம் ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து
ஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம், கடந்த கல்வி ஆண்டு
முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.
அதற்காக,
ஆங்கில வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு முகாம்
நடத்தப்பட்டு, ஆங்கில போதனை எடுக்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு
இணையாக, அரசு பள்ளியில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்கள், போதுமான ஆங்கில
அறிவு பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணம், ஆசிரியர்கள், போதுமான
ஆங்கில அறிவுடன் பாடம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பெயரளவில்
நடத்தப்படும் ஆங்கில வழி அரசு பள்ளிகளில், தமிழ்வழி வகுப்பு எடுக்கும்
ஆசிரியர்களே, ஆங்கில வழி வகுப்பும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில்,
பெரும்பாலான ஆசிரியர்கள், தமிழ்வழி ஆசிரியர் பட்டப் படிப்புகளை
படித்துவிட்டு, தமிழில் போட்டித் தகுதித் தேர்வையும் எழுதிவிட்டு, பணியில்
சேர்ந்தவர்கள் தான். துவக்கப் பள்ளியில், ஆங்கில பாடங்களை எடுப்பது எளிதாக
இருந்தாலும், உயர்நிலை வகுப்புகளில் ஆங்கில வழிப்பாடங்கள் எடுப்பது சிரமம்.
அதனால்,
போதுமான ஆங்கில அறிவு இல்லாத தமிழ்வழி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்,
ஆங்கில வழி வகுப்புகளை எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நெருக்கடிக்கு
தள்ளப்பட்டுள்ளனர். முப்பருவ கல்வி திட்டம் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக அரசு, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக, தமிழ்வழி
மாணவருக்கு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, முப்பருவ
கல்வி திட்டத்தை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி,
ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் கீழ், மாணவரின்
தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொண்டது.
அதேபோல்,
ஆங்கிலவழி வகுப்புக்கும் முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தி வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஆறு, ஏழு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு முப்பருவ ஆங்கில
வழிக்கல்வி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதற்காக, ஆங்கில வழி புத்தகங்கள்
அச்சடிக்கப்பட்டு, அவற்றை பள்ளிக்கு அனுப்பும் பணி துவங்கிவிட்டது.
முன்னதாக,
ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதில்,
மேற்கண்ட மூன்று வகுப்புக்கும், ஆங்கிலவழிக் கல்வி வகுப்பை துவங்கி,
தமிழ்வழி வகுப்பு எடுத்த ஆசிரியர்களை கொண்டு, ஆங்கில வகுப்பை எடுக்க
வேண்டும். அதனால், கோடை விடுமுறையில், ஆங்கில வழி மாணவர் சேர்க்கையை
தீவிரப்படுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளின்
உத்தரவு நடைமுறைப்படுத்துவது ஒருபக்கம் இருந்தாலும், அவை முழுமையடையாத
உத்தரவாகவே உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்
தமிழ்வழி படித்து, ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள். அவர்கள், துவக்கப்பள்ளி
குழந்தைக்கு எடுப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு.
பெற்றோர் அதிருப்தி
உயர்நிலை
வகுப்புக்கு ஆங்கில பாடத்தை எடுக்க அறிவுறுத்துவது இயலாத காரியம்.
அவர்களுக்கு என்னதான் பயிற்சி கொடுத்தாலும், போதுமான ஆங்கில அறிவு இன்றி
வகுப்பு எடுக்க முடியாது. அவர்கள் மீது, கல்வித்துறை ஆங்கில திணிப்பு
செய்வதால், ஆங்கில வழியில் மாணவரை சேர்க்க விரும்பும் பெற்றோரும் அதிருப்தி
அடைகின்றனர்.
போதுமான
ஆங்கில அறிவு பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ஆங்கில வழித்திட்டத்தை
அமல்படுத்தினால் மட்டுமே, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி
மாணவரும், ஆங்கில அறிவுபெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இது உண்மை நிலை தான். ஒரு பள்ளியில் தமிழ்வழியில் படித்து 485 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவனை எங்கள் பள்ளியில் ஆங்கில்வழியில் சேர்க்க ஒரு 6 வது ஆங்கிலபாடபுத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னால் ஒரு வரிக்கூட படிக்கமுடியவில்லை. அழுகிறான். காரணம் 10வ்தில் ஏதோ ஆங்கில்பாடத்திற்கு ரூட் அன்ஸ்ர்கலுக்கு ம்திப்பென் அலித்து திருத்துகிறார்கள். வாக்கியத்தை எழுத்வோ அல்லது இலக்கணமாக ந்டைமுறைபடுத்த்வோ தெரியவில்லை. ரூட் மேப் என ஒன்று உண்டு. left,right,go,straight, turn, school,hospital போன்ற இந்த சில வார்த்தைகளை எழுதினாலே 5 மதிப்பெண் போடுவதால் தமிழ்வழி படித்த மாணவ்ர்களுக்கு ஆங்கிலம் படித்த், எழுத் தெரியவில்லை. தழிழ் ந்ன்றாக படிகிறான் எழுதுகிறான். என்வே இதற்கெல்லாம் காரணம் மாணவ்ன் மீது குற்றமல்ல. மதிப்பீட்டு அள்வுகோலாலும், பெரும்பாலான ஆசிரிய்ர்கள கிராமபுறத்தில் படித்து முன்னேறியவர்கல் படித்தமாதிரியே நடத்துவதாலும், fluent talk ஆசிரியர்களுக்கு குறையாக இருப்பதாலும் மாணவ்ர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மை.உண்மை. என்வே ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் பயி
ReplyDeleteற்சி தந்து 6 மாதத்திற்கு ஒருமுறை அரசால் தேர்வு நடத்த்ப்பட்டு தேர்ச்சி பெறும்போது அவர்க்ளுக்கு ஆண்டிற்கான ஊதிய உயர்வு வழ்ங்கபட் அரசு நடவ்டிக்கை எடுத்தால் ஆங்கில்வழியில் மாணவ்ர்க்ள் மேம்படுவார்கள். வேரில் குறையிருந்தால் செடி எவ்வாறு வளரும்?
those government teachers are always ready to get promotion and increment know then why they are not ready to improve their knowledge, all those things are not given by government, they want to improve their knowledge by reading English news papers and watching English news. public are not fool so dont say above reason.
ReplyDeleteRefresher course for all Teaching staff should be given.
ReplyDelete