தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல்
மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி துவங்கி, 28ம்
தேதி வரை நடக்கிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலன் கருதி,
மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இணைய வழி மூலம் நடக்க உள்ளதால், மாவட்ட மாறுதல்
கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இடை நிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல்
கலந்தாய்வு, ஜூன் 28க்கு பதிலாக, ஜூன் 30,ஜூலை 1 என, இரண்டு நாட்கள்
நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு,ஜூன் 21க்கு பதிலாக, ஜூலை
2ம் தேதி நடக்கும். இந்த இரு கலந்தாய்வுகளும், ஆசிரியர்களின் நேரம், பயண
நேரத்தை குறைக்கும் வகையில், தற்போது பணிபுரியும் மாவட்டத்தில் இருந்தே,
தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில், இணைய தளம்
மூலம் நடக்கும். மற்ற கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டபடி,
வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகவும் அதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருட சந்தையை 10 நாட்கள் நீட்டித்துள்ளதாகவும் தகவல்.
ReplyDelete