சத்துணவு
மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வருகிறது என சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர்
பா.வளர்மதி தெரிவித்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பா.வளர்மதி பேசியது:
பெண்கள் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
விதவைகள் மறுமணத்துக்காக உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதேபோல்
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற விதவைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய கல்வித்தகுதி இல்லாததால் பலர் பயனடைய
முடியவில்லை.
கணவனை
இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு "ஆதரவற்ற விதவையர்
ஓய்வூதியத் திட்டத்தின்படி' மாதம்தோறும் ரூ.500 ஆக வழங்கப்பட்டு வந்த
ஓய்வூதிய தொகை தமிழக அரசால் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 10-ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது.
விதவைப்
பெண்கள் முன்னேற்றத்துக்காக அரசு மேலும் செயல்படுத்த வேண்டிய கோரிக்கைகளை
அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...