'பத்து லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும், வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்)
தேர்வு, நாளை, 14ம் தேதி நடக்கும்' என, ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி.,
(அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்த நிலையில், தேர்வாணைய இணைய
தளத்தில், '15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும்' என,
அறிவிக்கப் பட்டு உள்ளது.
வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணிஇடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, மார்ச், 17ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. மார்ச், 17ம் தேதியில் இருந்து, ஏப்ரல், 15ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு நிலையில் நடக்கும் தேர்வு என்பதால், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். நாளை, 14ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, தேர்வு நடக்கும் என, ஏற்கனவே, தேர்வாணையம் அறிவித்து உள்ளது.தகுதியான தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), சமீபத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும், 400க்கும் அதிகமான மையங்களில், தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பிட்ட சில மையங்களில், தேர்வு துவங்குவது முதல், முடியும் வரை, வீடியோ கண்காணிப்பு செய்யவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 - 15ம் ஆண்டு, தேர்வு அட்டவணை பகுதியில், வரிசை எண், 11ல் வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ., தேர்வு அறிவிப்பில், '15ம் தேதி' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், தேர்வாணைய இணையதளத்தின் மற்றொரு பக்கத்தில், '14ம் தேதி தேர்வு' என, அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், தேர்வு, 14ம் தேதியா அல்லது 15ம் தேதியா என, தெரியாமல், தேர்வர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.இதுகுறித்து, தேர்வாணைய வட்டாரம் கூறுகையில்,'14ம் தேதி காலை தான் தேர்வு நடக்கிறது. இதில், எந்த மாற்றமும் இல்லை. 15ம் தேதி என்று, எப்படி வந்தது என தெரியவில்லை' என்றது.- நமது நிருபர்

kularupadi ellamal exam nadathal adhu yenna exama?pala kulapamgaludan exam nadathu vadhu than tamil nattin peyrumai.yenda vote pottom yendra kulapathil nam erukum podhu yeppadhan vettri petrom enra kulapam goverment erukatha? Athan nammai alatta erukatha eppadi seiranga
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete