தமிழக
சமச்சீர் பாடத்திட்டத்தில், 9-ம் வகுப்பு முதல் பருவ மொத்த பாடங்களும்,
செய்யுள், உரைநடை, இலக்கணம் 3 என இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளன. உரைநடை
பகுதியில் அதன் துணைப்பாடமாகிய ‘மாமரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில்,
கொச்சையான(பேச்சு வழக்கு) வார்தைகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக ‘பழத்தெ’, ‘கெடச்சதை’, ‘நெனச்சா’,
‘பத்தி’, ‘ரொம்ப பேருகிட்ட’, ‘கதையெ’, ‘மரத்திலெ’, ‘யொன்னும்
சக்தியில்லெ’, ‘இதில’, ‘எழுபத்தஞ்சு’, ‘ஊர்ல’, என 75-க்கும் மேற்பட்ட
கொச்சையான வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த பாடப்புத்தகத்தை, தனது
மகளுக்கு வாங்கி கொடுத்த சாப்ட்வேர் நிறுவன துணை திட்ட மேலாளராக
பணிபுரியும் எம்.பரணிகுமார் என்பவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.
இது
தொடர்பாக அவர் கூறும்போது, “சி.பி.எஸ்.இ. கல்வி திட்ட மாணவர்கள்
பெரும்பாலும் தமிழை படிக்க முன் வருவதில்லை. தமிழ் மீது பற்று கொண்ட
பெற்றோர் தங்கள் குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழை
மொழிப்பாடமாக எடுத்து இருக்கும்போது, இந்த புத்தகத்தில் உள்ள தமிழை
அப்படியே படித்தால் அபத்தம்தான் நேரிடும். இந்த புத்தகத்தில் உள்ள தமிழை
படித்தால் மாணவர்களுக்கு தமிழ் எங்கே தெரியும்? தமிழ் எங்கே வளரும்?” என்று
நொந்து கொண்டார்.
இது
குறித்து மேலும் சில பெற்றோர் வருத்தத்துடன் கூறுகையில், ‘‘ஏராளமான தமிழ்
அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இன்றைய இளைய
சமுதாயத்தினர் பலர் ஆங்கில மோகத்தில் மெல்ல மெல்ல கொன்று வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில், 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தவறாகவோ அல்லது
கவனக்குறைவாகவோ அச்சிடப்பட்டுள்ள கொச்சையான வார்த்தைகள் தமிழ் மொழியை
சிதைக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எனவே இது போன்ற பிழைகளை திருத்தம்
செய்து பாடத்தை மாற்றி அமைக்கவேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.
Helllo indha books publish Panni 4 years aaguthu Ippo vandhu solringa
ReplyDeleteதுணைப்பாடம் என்பது கதையாசிரியர்கள் எழுதிய கதையை அப்படியே கொடுத்து இவ்வாறு தமிழகத்தில் பேச்சு வழக்கு உள்ளது என்றும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான்.அதுமட்டும் அல்லாமல் உரைநடையில் இருந்தால் குற்றம். திரு.கி.இராஜநாராயணன் போன்றோர் கிராமத்தில் எவ்வாறு பேசிக்கொள்கின்றனரோ அவ்வாறே எழுதுவார். அதனால் இதில் ஒன்றும் தவறில்லை. கெட்டவார்த்தைகள் இல்லாமல் இருந்தால் சரி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇங்கு குறிப்பிட்டுள்ளது துணைப்பாடத்தில் உள்ள ஒரு கதையை. இக்கதை கிராமத்தில் சூழலில் நடைபெறுவது. எனவே அங்கு என்ன சொற்கள் பயன்படுத்துகின்றனரோ அவ்வாறுதான் கதையிலும் இருக்கும். இலக்கணப்படி பேச முடியாது. திரு.பரணிக்குமார் சொல்வது போல தமிழை வளர்த்த பேச்சு வழக்கு சொற்களை நீக்குவது சரியான முறையல்ல. முதலில் இவர்களை வீட்டிலும்,குழந்தைகளிடமும் தமிழில் பேசச்சொல்லுங்கள். இந்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்பில் மொழிப்பாடம்- 1 கட்டாயம் தமிழ் இருக்க வேண்டும் என்றதும் தமிழ் பாடப்புத்தகத்தை வாங்கியுள்ளார். இதே போல முன்வகுப்புகளிலும் உள்ளது இவருக்குத் தெரியாது. பேச்சு வழக்கு சொற்களில் அமைந்த இலக்கியங்கள் நிறைய உள்ளன. இப்போது இவரின் பிரச்சனை என்னவென்றால் அவர்தம் பெண் இது போன்ற சொற்களைக்கூறி பொருள் கேட்டால் இவருக்கு சொல்லத் தெரியாது. இவர் முதலில் தன்னுடைய வீட்டிலும் ,அலுவலகத்திலும் தமிழை வளர்க்கட்டும்.அதை அவர் போன்றோர் செய்யும் போது அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும்.
ReplyDeleteஇவையெல்லாம் கிராமப்புறத்தில் பேசப்படுகின்ற வார்த்தைகள்..இதுதான் இனிமைத் தமிழ்..இங்கிலீஷிலேயே படித்த இவரைப்போன்றவர்களுக்கு இந்த இனிமை எங்கே புரியப் போகிறது? அது சரி..இங்கிலீஷிலேயும்தான் இது போன்ற கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.. ஒ.. அது இவர்களுக்குத் தெரியாது..
ReplyDelete