6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்2
தேர்வு ஹால்டிக்கெட் குரூப்2 தேர்வுக்கான ஹால்
டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகட்டுப்பாடுஅலுவலர்
ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வருகிற 29ம் தேதி முற்பகல்,
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில்(குரூப் 2 பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வை நடத்த உள்ளது.
இத்தேர்வுக்கு 6.25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை
பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்ட
ணம் மற்றும் தேர்வுக்கட்ட ணம்
செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு கிடைக்க
பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா?
என்பதை நிராகரிப்புப்பட்டியலில் கண்டறியலாம். நிராகரிப்பு பட்டியலில் இடம் பெறாத, சரியான
முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து, உரிய
விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத,
தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான
செலுத்துச்சீட்டின் நகலு டன் தேர்வாணையத்தின்
மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com
க்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும். நுழைவுச் சீட்டினை டவுன்லோடு செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்
பின் 1800 425 1 002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ
அல்லது
contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ
தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...