Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

       அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
        உயர் நீதி மன்றம் வழங்கிய பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள் கிரேடு- 3 ( 1.8.92 முதல் 1.9.98 வரை பணியில் சேர்ந்தவர்கள்) தனி ஊதியத்தில்5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.இதையடுத்து அனைத்து துறைத் தலைவர்களும் மேற்கண்ட டைப்பிஸ்டுகளுக்கு 5 சதவீத அடிப்படை சம்பளத்தை தனி ஊதியமாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த 5 சதவீத உயர்வு என்பது மேற்கண்ட டைப்பிஸ்டுகள் அதே பணியில் நீடிக்கும் வரையில் தொடரும்.

      டைப்பிஸ்ட் பணியில் இருந்து மேற்கண்ட நபர்கள் பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு செல்லும் போது இந்த தனி ஊதியம் கிடைக்காது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive