பசங்களை படிக்க எழுப்பி விடுங்க; பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு: காலை 5 மணிக்கு இனி போன் வரும்!
கர்நாடகா
மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க,
அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது. அதிகாலையில்,
மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு,
ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில்,
முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, கிம்மன் ரத்னாகர் பதவி வகிக்கிறார். இவர்,
தட்சண கன்னடா மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 10ம்
வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, பல்வேறு
தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார். இதன் அடிப்படையில், புதிய முடிவு ஒன்றை
அவர் எடுத்துள்ளார். இதன்படி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின்
பெற்றோருக்கு, அவர்களின் ஆசிரியர்கள் மூலமாக, தினமும் அதிகாலை 5:00
மணிக்கு, மொபைல் போன் மூலமாக அழைப்பு வரும். அப்போது, ஆசிரியர்கள், 'உங்கள்
பையன் படிப்பதற்கு எழுந்து விட்டானா? இல்லையெனில், எழுப்பிவிட்டு,
படிக்கச் சொல்லுங்கள்' என, அறிவுறுத்த உள்ளனர். முதல் கட்டமாக, தட்சண
கன்னடா மாவட்டத்தில் மட்டும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுவதும், இதை விரிவுபடுத்த
திட்டமிடப்பட்டு உள்ளது.
nice idea ,tamilnadu also follow this
ReplyDeleteUnga comedy kku limit illaya..next teachers um students koodave thoonga sollunga innum rempa mark vaangalasm
ReplyDeleteஆசிரியரை DEO எழுப்புவாரா?. DEO வை CEO எழுப்புவாரா?
ReplyDeletei like this
Deleteceo vi director eluppuvar. Director i secr. Edn elupuvar.... Secr i cm eluppuvar...
Deleteதேர்வு என்ற பெயரில் பெற்றோருக்கும் தொந்தரவா?
ReplyDeleteஆசிரியர்கள் இதை ஒன்றைத்தான் செய்யவில்லை. இந்த ஐடியாவுக்கு ரூம் போட்டு யோசிப்பங்களோ.
ReplyDeleteஅவர் என்ன சித்தராமையாவா ? சித்தபிரமை பிடித்த ராமையாவா ? தமிழ்நாட்டுக்கு தண்ணி விடுவதற்கு தெரியாத இவர் இப்படித்தான் யோசிப்பார் ?
ReplyDeleteWhat is this
ReplyDeleteGood comedy..
ReplyDelete