தனி நபர் வருமான வரி
உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த
வேண்டும் என்று பிரதமருக்கு கோவை,
திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம்
(காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. நாடு
முழுவதும் உள்ள பல்வேறு பெரிய
நிறுவனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் இங்கு
தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. விரைவில்
தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை
அறிக்கையில் குறுந்தொழில் வளர்ச்சிக்கென தனியாக சிறப்பு நிதி
ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய
சிறுதொழில் வளர்ச்சியை நாடு முழுவதும் துவங்கி,
குறைந்த வட்டியில் குறுந்தொழில் கூடங்களுக்குக் கடன் வழங்கவேண்டும்.
கோவையில்
மத்திய அரசின் பொதுத் துறை
தொழிற்சாலையை துவங்கவேண்டும். குறுந்தொழில் முனைவோர் நிலம் வாங்கிக் கட்டடம்
கட்டுவதற்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கவேண்டும்.
குறுந்தொழில் முனைவோருக்கு பொதுத் துறை வங்கிகளில்
8 சதவீதம் வட்டியில் ரூ. 25 லட்சம் வரை
கடன் வழங்கவேண்டும். மத்திய
அரசின் பொதுத் துறை நிறுவனங்கள்
கொள்முதல் செய்யும் உதிரிபாகங்களில் 20 சதவீதத்தை சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம்
இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்.
நாடு முழுவதும் ஏற்றத் தாழ்வின்றி ஒரே
மாதிரியான மதிப்புக் கூட்டு வரியை அமல்படுத்தவேண்டும். கடந்த
2004-ஆம் ஆண்டு முதல் கலால்
வரி உச்சவரம்பு ரூ. 1.5 கோடியாக இருந்து
வருகிறது. இதை ரூ. 3 கோடியாக
உயர்த்தவேண்டும். அரசுடைமை வங்கிகளில் கடனைத் திரும்பச் செலுத்த
3 ஆண்டு கால அவகாசம் வழங்கவேண்டும். குறுந்தொழில்
முனைவோர் மற்றும் நடுத்தர மக்களின்
வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிநபர்
வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...