டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய
வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை
கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு
(டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2011ல்
தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம்
பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5
சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம்
பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம்
சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி
ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக
வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற
தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்
என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு
மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி
தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி
ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2
தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி
தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர்
தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ்
முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.
புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:
டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப்
பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத
தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82
மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு
பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி
தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட
படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான்
அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது பெறுவார்கள்.
மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப்
பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில்
குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69
புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி
பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம
அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி
பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15
ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக
முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம்
பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள்
மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப்
பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம்
விளக்க வேண்டும்.
இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
Dear padasalai..
ReplyDeleteAlready we know that for 15000 vacancy 73000 have been passed..
After posting rest 58000 will not get at this time..
Naanga kekradae Anda list'a Sikkirama Vida solli thaan.... 58000 perayum pvt sch dairiyama appoint pannuvanga sir..
Ippo Tet la pass panna piragu.... yenda pass aanomnu varutapada vendiya nilamai ippo enaku... already work panna pvt sch ungaluku govt job kidachudum so ninnukonganu anupitanga... try panra Ella sch laum same response... so ippo oru maasama pakkatula irukura textile shop la vela parkren... ide nilamai thaan pala nanbargaluku erpaturuku...
Valka valamudan....
Atleast select aaga pogum anda 15000 anbu nanbargaluku en vaaltukal...
thatla Idly ah pottutu thalaiela idiya podureengaleppa....................
ReplyDeleteTNTET தொடரும் குழப்பங்கள்:
ReplyDelete.01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
1. BA/BSc மதிப்பெண் சதவீதம் ஒவ்வொரு சான்றிதல் சரிபார்ப்பு மையத்திலும் ஒவ்வொரு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளது.
2. UGC & NCTE வழிகாட்டி நெறிமுறைகள் MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே மதிப்பெண் சதவீதத்தைக் கணக்கிடவேண்டும் என்று கூறுகின்றது.
3. நமது பட்டங்களும் (DEGREES/CONVOCATION CERTIFICATES) MAJOR & ALLIED பாடங்களைக்கொண்டு மட்டுமே கணக்கிட்டு முதல் வகுப்பு / இரண்டாம் வகுப்பு என வழங்கப்பட்டுள்ளன.
4. பெரும்பாலான சென்டர்களில் மொழிப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டுள்ளன.
5.சில சான்றிதல் சரிபார்ப்பு மையங்களில் NCC/NSS/EXTRA CURRICULAR ACTIVITIES போன்ற பாடங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை
6. அரசு கல்லூரிகளில் BA/BCOM/MA/MSc/BEd போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் (ADMISSION) பொழுது இதுவரை MAJOR & ALLIED படிப்புகளின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
7. கணிதம்/ அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு மொழிப்பாடங்களையும் (TAMIL / ENGLISH) சேர்த்து கணக்கிடுவதால் CUT OFF குறைய வாய்ப்பு அதிகம்.
.01 மதிப்பெண்ணில் கூட வேலை பறிபோகலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். இது குறித்து பல்கலைகழகப் பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டேன் .
நாளை ஒரு வழக்கினைப் பதிவு செய்கிறேன். வெற்றி நமதே
Yes. It is a good move. TRB people unnessarily include part-1 and part-2 marks for calculating aggregate percentage. It should be in university norms of the candidate who got degree(as per UGC). I also lost 7% of marks in aggregate by including languages(71% drops to 64%). so put one more case against TRB.
ReplyDeletePlease share the above Tamil comment about UG percentage...
ReplyDeleteTET BASIC GOVERNMENT POSTINGS 15000 APPOINTMENT. BALANCE TET PASSED CANDIDATES EAITED SCHOOL POSTINGS PUDUNGA PLEASE
ReplyDeletesir you are take example for weightage is mark but mark is not take for weightage only we are take percentage for weightage so recorrect the stanza and example for weightage, one canditate who take the mark in tet exam is 82 he is obtained 55% so the new weightage system allowed only for 33% does not 49.20 (example (55*60)/100 that way is correct) but the way ((82*60)/100 is not correct one ) so correct the sentence thank u all student follow this method
ReplyDeleteUG markற்கு weightage கணக்கிடுவதில் அநேக குழப்பங்கள் உள்ளன அதற்கு கொடுக்கபடும் weightageஐ ரத்து செய்து அதன் மதிப்பெண்ணையும் tet mark weightageற்கே வழங்கலாம்
ReplyDeleteneenga vetra kulappatheenga.15000 vacancy.. athu poga avvalavuthana varum.. entha weightage runtha enna?
ReplyDeleteMy tet mark is 106.My weightage is 67.12(English major). My cousin got 94marks in TET.But her weightage is 68.7.She is 11 years younger than me.Eventhough I got more marks in TET,I am not sure to get job.
ReplyDeleteI am very sure age above 35 and B.Ed scholors before 2008 can not get job.
yes it is absolutely true and in my certificate part iv mark is 46(most of persons got this mark )due to this i lost 10% in my UG...Yenda 10 varusathuku munnadi porandhomnu iruku friends(i missed education, coaching, syllabus)
ReplyDeletewhy this kolaveri for the people if you have studied properly you would have got the job then why are you asking for concession
ReplyDelete