தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத்
தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்'
ஆகியுள்ளனர்.
மாவட்ட கல்வி அதிகாரியான
- டி.இ.ஓ., பணியிடங்களில்,
25 இடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கு
தகுதியான ஆட்களை தேர்வு செய்ய,
பிப்ரவரியில், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
வெளியிட்டது. பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வியில்
பட்டம் பெற்று இருப்பவர்கள், இந்த
தேர்வு எழுத தகுதியானவர்கள். இப்பணிக்காக,
18 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த
தேர்வு, இரண்டு நிலை தேர்வுகளை
உள்ளடக்கியது. இதில், முதல் நிலை
தேர்வு, நேற்று, தமிழகம் முழுவதும்,
67 மையங்களில் நடந்தது. விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், அதாவது,
9,000 பேர், நேற்றைய தேர்வில் பங்கேற்கவில்லை.
சென்னை, எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பள்ளியில்
அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 400 பேரில்,
222 பேர் மட்டுமே பங்கேற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
sir, please can u upload DEO question paper.....
ReplyDeleteSir. Pl question paper?--ARIVARASU
ReplyDeleteArivu sir
DeleteDownload it from TNPSC site
update deo answer key or any other website answer key published pl comment
ReplyDelete