Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு

         பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

        புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பொன்னுச்சாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பிரகாஷ், பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1080 மதிப்பெண் பெற்றார். ஆங்கிலம், கணிதம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் விடைத்தாள் நகல்கள் கோரி, அரசுத் தேர்வுகள் துறைக்கு விண்ணப்பித்தார். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ததில், கணிதம் தவிர பிற பாடங்களுக்கு நகல்கள் கிடைத்தன. கணித விடைத்தாள் நகல் கோரி, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலரிடம் பிரகாஷ் விண்ணப்பித்தார். கணிதத்தில் 44 பக்கங்கள் விடையளித்திருந்தார். ஆனால், கல்வி அலுவலகம் மூலம் வழங்கிய விடைத்தாள் நகலில், பக்கம் 35 முதல் 38 வரை காணவில்லை. மொத்தம் 100 மதிப்பெண்ணிற்குரிய 10 மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்ததில், 97 மதிப்பெண் வழங்கியுள்ளனர். 6 மதிப்பெண்ணிற்குரிய, 10 கேள்விகளுக்கு 56 மதிப்பெண், மொத்தம் 153 மதிப்பெண் வழங்கியுள்ளனர். கேள்விகளுக்கு விடையளித்ததில் தவறு இருந்தால் பூஜ்ஜியம் (0), விடையளிக்காமல் இருந்தால் வெறும் கோடு ஆகியவற்றை அடையாளமாக, விடைத்தாள் முதல் பக்கத்தில் குறிப்பிடப்படுவர். பிரகாஷ், 40 மதிப்பெண்ணுக்குரிய ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளித்திருந்தார். ஆனால், விடையளிக்கவில்லை என, பூஜ்ஜியம் இட்டுள்ளனர். இதனால், பிரகாஷிற்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால், பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின்போது, முக்கிய கல்லூரியில் பிரகாஷிற்கு இடம் கிடைக்குமா? என அச்சப்படுகிறேன். 40 வினாக்களுக்கு விடையளித்துள்ளதை மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கவும், பொறியியல் கவுன்சிலிங் தரவரிசைப் பட்டியலில் எனது மகனின் பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் குமார் ஆஜராகினர். நீதிபதி, "அரசுத் தேர்வுகள் இயக்குனர், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive