ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்
தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2
தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள்
தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800
உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன்
29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட்
வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில்
நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும்
விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர்.
போட்டித் தேர்வு பயிற்சி மைய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வங்கித் தேர்வு இந்தியா முழுவதும் நடக்கும். வங்கி, யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., தேர்வு தேதியை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும். மாநில அரசுப்பணிகளுக்கு தேர்வு நடத்தும் போது, மத்திய அரசு தேர்வு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.,யில் இதை கவனிக்காமல் அறிவிப்பதால் பட்டதாரிகள் சிக்கலில் தவிக்கின்றனர்.
'குரூப் 2' நேரடி உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 'மெயின்' தேர்வு, நேர்காணல் இன்றி வேலை கிடைக்கும். ஆனால் வங்கித் தேர்வில் தவறான விடைக்கு 'மைனஸ்' மதிப்பெண் போடுவர். இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் 'குரூப் 2' தேர்வைத்தான் எழுதுவர். வங்கி தேர்வுக்கு மட்டுமே தயாராகும் பட்டதாரிகள் மட்டுமே அதை எழுதுவர். இதனால் 'குரூப் 2' தேர்விற்கு கடும் போட்டி இருக்கும்.இவ்வாறு கூறினார்.

also NEt exam falls on the same date
ReplyDeleteirukettum unakenna?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteHi
ReplyDelete