பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறுமதிப்பீடு கோரி,
தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு
விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல்
செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி,
நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல்,
இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு
முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.
பொறியியல், 'ரேங்க்' பட்டியல், வரும், 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதையொட்டி, அண்ணா பல்கலைக்கும், நேற்றிரவே, 'சிடி' அனுப்பி வைக்கப்பட்டது.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில், எத்தனை மாணவர்களுக்கு, மதிப்பெண் மாறியது என்ற விவரத்தை, தேர்வுத்துறை தெரிவிக்கவில்லை. எனினும், கணிசமான மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.
மதிப்பெண் மாற்றம் குறித்த விவரம், தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tndge.in) இன்று காலை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...