மத்தியில்
பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இதில் வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று
வங்கியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
செவ்வாய்க்கிழமை
நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோ சனைக் கூட்டத்தில் இது குறித்து
ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா
சீதாராமனும் கலந்து கொண்டார். வங்கிகள் வாராக் கடனுக்காக ஒதுக்கும்
தொகையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை
வங்கியாளர்கள் இந்த கூட்டத்தில் முன்வைத்தனர்.
நிரந்தர
வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யும் அளவு ரூ.
10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்துவது குறித்தும்
பரிசீலிக்கப்பட்டது.
பங்குச்
சந்தையில் எல்ஐசி நுழைவது நிதித்துறையில் மிகப் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்தும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் உதய்
கோடக் கூறினார்.
மேலும்
பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் பட்டிய லிடப்பட்டால் அது இந்திய
பங்குச் சந்தையின் போக்கையே பெருமளவில் மாற்றியமைக்கும் என்று
குறிப்பிட்டார்.
இந்த
முடிவானது எதிர்வரும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று அவசியமில்லை.
இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளில் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்
கோடக் குறிப்பிட்டார்.
பங்குச்
சந்தையில் பட்டியலிடப் படுவதால் மத்திய அரசு எல்ஐசி-யை முற்றிலுமாக கைவிட
வேண்டி யதில்லை. குறைந்தபட்சம் 5 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்க வேண்டும்
என்றும் அவர் ஆலோசனை கூறினார். மேலும் இத்தகைய முடிவால் அரசின் வருமானம்
பெருகும் என்றும் அவர் கூறினார்.
வருமான வரி விலக்கு
ராஜீவ்
காந்தி மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு திட்டத்தில் (இ.எல்.எஸ்.எஸ்.) மிகப்
பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று உதய் கோடக் வலியுறுத்தினார். வருமான
வரி விலக்கு வரம்புக்கான 80சி பிரிவில் இரண்டு பிரிவு உருவாக்கப்பட
வேண்டும். வரம்பு அளவு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த
வேண்டும் என்றும் அவர் கூறினார். 80
சிசிஎப் என்ற பிரிவை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் அடிப்படைக்
கட்டமைப்புக்கான கடன் பத்திரங்களில் முதலீடு பெருகும் என்று வங்கியாளர்கள்
ஆலோசனை கூறினர்.
வங்கிகளின்
வாராக் கடனை வசூலிக்க சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று
ஹெச்எஸ்பிசி வங்கித் தலைவர் நினா லாக் கித்வாய் வலியுறுத்தினார்.
கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தலாம் என்ற ஆலோசனையும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சொத்து
மீட்பு அமைப்பானது கட்டமைப்பு சொத்துகளை மீட்க உதவாது. எனவே பிரத்யேகமாக
சொத்து மீட்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வங்கியாளர்கள்
வலியுறுத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...