சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846
இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது. தகுதியான தேர்வர்களுக்கு,
டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று,
'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம்
தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு
நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை,
6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில்,
(www.tnpsc.gov.in) ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு
உள்ளது. 'ஹால் டிக்கெட்' கிடைக்காத விண்ணப்பதாரர், நிராகரிப்பு பட்டியலில்,
தங்களின் பெயர் உள்ளதா என பார்க்க வேண்டும்.உரிய தகுதியுடன், சரியான
முறையில் விண்ணப்பித்து, உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தியும், 'ஹால்
டிக்கெட்' கிடைக்கவில்லை எனில், contacttnpsc@gmail.com என்ற, இமெயிலுக்கு,
உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம்.இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 943 பேரின் விண்ணப்பங்கள், அதிக வயது
உள்ளிட்ட, பல காரணங்களால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...