வழக்கு விசாரணையை தள்ளிவைக்க, 25 ஆயிரம் ரூபாய்,வழக்கு செலவு தொகை
வழங்கும்படி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு,சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மின் வாரியத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள்,தங்களை நிரந்தரப்படுத்த கோரினர். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த, மின் வாரியத்துக்கு, தொழிலாளர் ஆய்வாளர்கள் உத்தரவிட்டனர். 2007, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவு அமல்படுத்தப்படாத தால், உயர் நீதிமன்றத்தில், தொழிலாளர்கள் தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தொழிலாளர் ஆய்வாளர்கள் பிறப்பித்த உத்தரவை, மின் வாரியம் அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டது. 2011, பிப்ரவரியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்,தொழிலாளர் ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் (மின் வாரியம்) சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை,நீதிபதி சந்துரு தள்ளுபடி செய்து, 2012, மார்ச் மாதத்தில் உத்தரவிட்டார். பின், சுப்ரீம் கோர்ட் வரை, 'அப்பீல்'மனுக்கள், விசாரணைக்கு சென்றன. சுப்ரீம் கோர்ட்டும், அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்தது. இருந்தாலும், மறு ஆய்வு கோரி, உயர் நீதிமன்றத்திலே முறையிட, தடையில்லை என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து,மறு ஆய்வு கோரி, உயர் நீதிமன்றத்தில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. மின் உற்பத்தி கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மறு ஆய்வு கோரியும், கால தாமதமாகதாக்கல் செய்யும் மனுக்களை அனுமதிக்கக் கோரியும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கால அவகாசம் வேண்டும்' என்றார். இதற்கு, தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்ப்பு தெரிவித்தார்.இழுத்தடிப்பதற்காக, மறுஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக, வழக்கறிஞர் தெரிவித்தார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி சத்தியநாராயணன், பிறப்பித்த இடைக்கால
உத்தரவு: நீதிமன்றஅவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர். 2011,
ஆகஸ்ட்டில், அவமதிப்பு மனு,விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அதன்பின்,
விழித்துக் கொண்டு, தொழிலாளர் ஆய்வாளர்களின்உத்தரவை எதிர்த்து, கால
தாமதமாக, மின் வாரியம் வழக்கு தொடுத்துள்ளது. அதுவும், தள்ளுபடி
ஆனது.மறுஆய்வு கோரிய, மின் வாரிய அதிகாரிகளின் நடத்தையைப் பார்க்கும் போது,
வழக்கை நடத்தஆர்வமில்லாமல், ஏதாவது ஒரு காரணத்துக்காக, விசாரணையை
தள்ளிவைக்க கோருவது, நியாயமற்றது. வாரியம் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்,
மீண்டும் ஒருமுறை, விசாரணையை தள்ளிவைக்க கோரி உள்ளார். இந்தவழக்குகள்
அனைத்தும், இறுதி விசாரணைக்கு, ஜூலை, 11ம் தேதிக்கு, தள்ளி
வைக்கப்படுகிறது. 'வாய்தா'வழங்குவதற்கு, வழக்கு செலவுத் தொகை
விதிக்கப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஜூலை,9ம்
தேதிக்குள், தொழிலாளர்களின் வழக்கறிஞருக்கு, 25 ஆயிரம் ரூபாய், வழங்க
வேண்டும்.
இவ்வாறு,நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...