ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில்,
பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், 25 சதவீத பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கே
வரவில்லை. இந்த வாகனங்களை இயக்க தடை விதிப்பதுடன், அடுத்த கட்ட
நடவடிக்கையிலும், போக்குவரத்துத் துறை இறங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 18,786 வாகனங்கள்
உள்ளன. இவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு, மே 7ம் தேதி
துவங்கியது. படிக்கட்டு, அவசரகால கதவு, வேகக்கட்டுபாட்டு கருவி உள்ளிட்ட
பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தகுதி சான்றிதழ் கடந்த, 27ம்
தேதி வரை, 13,130 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு குறைபாடுள்ள, 1,279 பள்ளி
வாகனங்களுக்கு, தகுதி சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5,656 பள்ளி
வாகனங்களில் ஆய்வு பணி தொடர்ந்தது. மே, 31ம் தேதி வரை, நடந்த ஆய்வில்,
மொத்தம், 75 சதவீத பள்ளி வாகனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. விடுமுறை
முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், ஆய்வுக்கு வராத, 25 சதவீத பள்ளி
வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லை.
இதுதொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது: ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள் மற்றும் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டு, தகுதி சான்றிதழ் பெறாத பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்க
மாட்டோம். ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்கள் குறித்த விவரங்கள், இன்று
கிடைக்கும். இந்த விஷயத்தில், நாங்கள் எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கைகள்
குறித்து, பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கு உடனடியாக கடிதம் அனுப்பப்படும்.
தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை, கண்டறியும் பணியில்
கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆட்டோக்களிலும் ஆய்வு
பள்ளி வாகனங்கள் இயக்கப்படாத சூழலில், பள்ளி
மாணவர்கள், ஆட்டோக்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, பலர் வழக்கமாக
ஆட்டோக்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.இந்த ஆட்டோக்களில்,
12 வயதிற்கு குறைவானவர்களாக இருந்தால், ஐந்து பேரும்; 12 வயதுக்கு மேல்
இருந்தால், மூவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்த விதியை மீறி, அதிக மாணவர்களை ஏற்றிச்
செல்லும் ஆட்டோக்களை கண்டறியும் பணியும் இன்று துவங்குகிறது. சென்னையில்,
மீட்டர் போடாத ஆட்டோக்களை கண்காணிக்கும் குழுக்களே, இந்த பணியையும்
மேற்கொள்ளும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...