தலைமையாசிரியர்களுக் கான இடமாறுதல்
கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி துறையை
கண்டித்து 23ம் தேதிஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
தஞ்சை மாவட்டச் செயலாளர் நீலகண்டன் கூறியிருப்பதாவது: கடந்த 17ல் நடைபெற்ற
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணி யிட மாறுதல் கலந்தாய்வில்
பட்டுக்கோட்டை நகராட்சி கண்டியன் தெரு நடுநிலைப்பள்ளியின் காலிப்பணியிடத்தை
மறைத்து தேர்ந் தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவருக்கு பணி யிட மாறுதல்
வழங்காத மாவட்ட தொடக்கக்கல்வித்துறையை கண்டித்து பட்டுக்கோட்டையில் உள் ள
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பட்டுக்கோட்டை நகரம், வட்டாரம் மற்றும்
மாவட்டக்கிளையின் சார் பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனை த்து
ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாறுதல் முறைகேட்டினை கண்டிக்கும் 'வீரம்' தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன்.
ReplyDelete