பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.
விடைத்தாள் நகல்களைக் கோரிய மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் ள்ற்ன்க்ங்ய்ற்.ட்ள்ங்14ழ்ற்ழ்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து
விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்தனர். சுமார் 40 மாணவர்கள் வரை
விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை இருப்பதாக தொலைபேசி
உதவி மையத்தை அணுகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களையும் அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் ஜூன் 9-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் மறுமதிப்பீடு,
மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல்,
மறுமதிப்பீட்டுக் கட்டணம் எவ்வளவு? மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள்,
ஆங்கிலம், உயிரியல் பாடத்துக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு தலா
ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு மொழிப்பாடங்கள்,
ஆங்கிலப் பாடத்துக்கு தலா ரூ.1,010-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.505-ம்
கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
உதவி
மைய எண்கள்: விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை
இருந்தாலோ, விடைத்தாள் சரியாக ஸ்கேன் செய்யப்படவில்லையென்றாலோ 8012594116,
8012594121, 8012594125, 8012594126 ஆகிய உதவி மைய எண்களில்
தொடர்புகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுவரை எந்த அரசுத் தேர்வுகள் இயக்குனர்கள் செய்திடாத புதிய முயற்சியை செய்த திரு. தேவராஜ் தேர்வு இய்க்குனருக்கு பாராட்டுக்கள். அதுவும் நகல் புகைப்படத்துடன் வெளியிட்டு ஆச்சிரியத்தில் ஆழ்ந்திய அன்னாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletebest wishes to Examination Director Mr.Devaraj for updating new Technic in xerox copy with photo as vettriarasan said
ReplyDelete