நாளை நடைபெறும் குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது.
இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக
தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான
எழுத்துத் தேர்வு நாளை நடத்துகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு
மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதற்காக 114 தேர்வு மைங்களில் 2217
தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 6
லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து
கூடங்களும் வீடியோ எடுக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் காலை 10.30 மணி வரை
மட்டும் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு மையங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கூடங்கள் அனைத்தும் ‘வெப்காஸ்டிங்’ மூலம் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. சில கண்காணிக்கப்பட வேண்டிய தேர்வுக்கூடங்கள் வெப்காஸ்டிங் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியராலும், தேர்வாணைய கட்டுப்பாட்டு அறைகளிலிருந்தும் கண்காணிக்கப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...