பிளஸ்
2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறு பாடங்களில், மறு மதிப்பீடு கோரி,
தேர்வுத் துறையிடம் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், 200 பேர், மறுக்கூட்டல்
கேட்டு, விண்ணப்பித்துள்ளனர்.விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்யும் பணி,
திருச்சியில், நேற்று துவங்கியது.
600 ஆசிரியர்கள், 3,800 பேரின் விடைத்தாள்களை,
மீண்டும் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பணி, 12 அல்லது, 13ம்
தேதியுடன் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'மறு மதிப்பீட்டில்,
மதிப்பெண் மாற்றம் கொண்ட மாணவர்களின் விவரம், மருத்துவக் கல்வி
இயக்குனரகத்திற்கும், அண்ணா பல்கலைக்கும், உடனடியாக தெரிவிக்கப்படும்' என,
தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.மருத்துவ
படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான, 'ரேங்க்' பட்டியல்,
14ம் தேதி வெளியாகும் என, தெரிகிறது. பி.இ., ரேங்க் பட்டியல், 16ம் தேதி
வெளியிடப்படும் என, ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரேங்க்
பட்டியல் வெளியாவதற்கு முன், மறு மதிப்பீடு முடிவை தெரிவிக்க
வேண்டியிருப்பதால், பணிகளை, தேர்வுத்துறை வேகப்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...