திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு
நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர்
விண்ணப்பித்து இருந்தனர். 114 மையங்களில் நேற்று காலை 10:00 முதல் பகல்
1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது.
நெல்லை
மாவட்டத்தில் 28 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19
ஆயிரத்து 383 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 8 ஆயிரத்து 991 பேர் வரவில்லை.
ஏறக்குறைய 32 சதவீதம் பேர் பங்கேற்க வில்லை. இதே நாளில் உளவுத்துறை இளநிலை
அதிகாரி, ஸ்டேட் பாங்க் அதிகாரிக்கான தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்
இருந்ததால், வரவில்லையா என்பது தெரியவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...