கல்வி மாவட்டத்தில் 261 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் சேருகின்றனர்.
அவ்வாறு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு அவசியம் இருக்க வேண்டும்என தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகளில், மாணவர்கள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் இருந்தால் தான் பள்ளியில் சேர்த்துக் கொள்வோம் என கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால், மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் கணக்கு துவங்க வங்கிகளுக்கு படையெடுத்து உள்ளனர்.இதுகுறித்து, சில மாணவர்கள் கூறுகையில், அரசு மேனிலைப் பள்ளிகளில் சேர விண்ணப்பம் மற்றும் உரிய சான்றுகளுடன் செல்கிறோம். ஆனால், பள்ளிகளில் வங்கி கணக்கு உள்ளதா, இல்லை என்றால் முதலில் வங்கியில் கணக்கு துவங்கிவிட்டு வாருங்கள். அப்போது தான் உங்களுக்கு பள்ளியில் இடம் கிடைக்கும். இல்லை என்றால் பள்ளியில் சேர முடியாது என அச்சுறுத்துகின்றனர். இதனால் எங்களின் மேனிலைக் கல்வி கேள்விக்குறியாக உள்ளது என்றனர்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் கூறியதாவது: பத்தாம் மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், இடை நிற்றலை குறைக்க அரசு ஆண்டுக்கு ஒரு முறை பத்தாம் மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தலா 1,500 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா 2000 ரூபாயும் வழங்குகிறது.இந்த தொகை மாணவர்கள் கல்வியை முடித்துவிட்டு செல்லும்போது, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேராக அனுப்புவதற்குத்தான், ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க சொல்கிறோம். மாணவர்கள் சேர்க்கையின் போதே, வங்கி கணக்கு எண்ணையும் உடனேவாங்க வேண்டும் என எங்கள் உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளனர். ஆகையால் தான் மாணவர்கள் சேரும் போது வங்கி கணக்கு அவசியம் என கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தொகை...
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறுகையில், மாணவர்கள் வங்கி கணக்கு துவங்கி, பள்ளியில் ஒப்படைக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதுடன் கடமை முடிந்தது என, பள்ளி பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. வங்கி கணக்கு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, கணக்கு எண் கொடுக்காததால் அரசு வழங்கும் தொகையை மாணவர்களிடம் சேர்க்க முடிவதில்லை. இதனால் தான், தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு வேண்டும் என கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...