மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்
கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில்
சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக்
கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட
இளங்கலை கல்வியியல் (பி.எட்.,) பட்டப்
படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க அரசு
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்
2 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்
கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட
பல்கலை மூலம் பட்டம் பெற்றிருக்க
வேண்டும். அரசு இடஒதுக்கீடு அடிப்படையில்
சேர்க்கை நடக்கும். நுழைவுத் தேர்வு தேதி பின்னர்
அறிவிக்கப்படும். விண்ணப்பம் பெற தேதி 18.7.2014 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. 'பல்கலை நகர், மாணவர்
சேர்க்கை மையம் மற்றும் நகர்
வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை-2' ஆகிய
இரண்டு இடங்களில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்
Teacher velaiye illai yara ematha BED application vikkarenga .
ReplyDelete