Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.இ.,க்கு விண்ணப்பித்த 1.75 லட்சம் மாணவர்களுக்கு நாளை 'ரேண்டம்' எண்..... 'கட் - ஆப்' போடுவது எப்படி?


             பி.இ., படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள, 1.75 லட்சம் மாணவர்களுக்கும், நாளை காலை, 'ரேண்டம்' எண் ஒதுக்கப்படுகிறது. பி.இ., படிப்பில் சேர, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில், 'கட் - ஆப்' மதிப்பெண், 200க்கு, மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், வரும், 16ம் தேதி, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, விண்ணப்பித்த, 1.75 லட்சம் பேருக்கும், அண்ணா பல்கலையில், நாளை காலை, 9:30 மணிக்கு, 'ரேண்டம்' எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், 'ரேண்டம்' எண் ஒதுக்கீட்டை, துவக்கி வைக்கிறார்.
 
          10 இலக்க எண்கள் அனைத்து மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் மூலம், 10 இலக்க எண்கள் வழங்கப்படும். இதில், எத்தனை பேர், 'ரேண்டம்' மூலம் தேர்வாகின்றனர் என்பது, 16ம் தேதி தான் தெரியும்.* முதலில், 200 மதிப்பெண்ணுக்கு, அதிக, 'கட் - ஆப்' எடுத்தவர் வாரியாக, 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படும்.* கணிதத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர், ஒரே மதிப்பெண் (அதிகபட்சம், 100 மதிப்பெண்) பெற்றிருந்தால், அவர்கள், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.* இயற்பியலிலும் (50மதிப்பெண்) அம்மாணவர்கள், ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், நான்காவது பாடத்தில் (கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல்) எடுத்த மதிப்பெண், பரிசீலனைக்கு எடுக்கப்படும்.* நான்காவது பாடத்திலும், 'டை' வந்தால், மாணவர்களின் பிறந்த தேதியைப் பார்த்து, யார், 'சீனியரோ', அவர்களுக்கு, 'ரேங்க்' பட்டியலில், முன்னுரிமை அளிக்கப்படும்.*மேற்கண்ட பட்டியலுடன் நிற்காமல், பிறந்த தேதியும் ஒன்றாக வந்தால், அப்போது, அவர்களுக்கான, 'ரேண்டம்' எண் அடிப்படையில், மதிப்பு அதிகம் உடைய, 'ரேண்டம்' எண், எந்த மாணவர்களிடம் இருக்கிறதோ, அவர்களுக்கு, 'ரேங்க்' பட்டியலில், முன்னுரிமை தரப்படும். * கடந்த ஆண்டு, 20 மாணவர் களுக்கு, 'ரேண்டம்' எண் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'கட் - ஆப்' போடுவது எப்படி?

* பி.இ., படிப்பிற்கு, இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய, மூன்று பாடங்களில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், 'கட் - ஆப்' மதிப்பெண் போடப்படுகிறது.
*இயற்பியல், வேதியியலில், தலா, 200க்கான மதிப்பெண், 50க்கு (எடுத்த மதிப்பெண்ணை, நான்கால் வகுத்தால், 200க்கான மதிப்பெண் கிடைக்கும்) கணக்கிடப்படும். கணிதத்தில் எடுக்கும் மதிப்பெண், 100க்கு (எடுத்த மதிப்பெண்ணை, இரண்டால் வகுத்தால் வருவது) கணக்கிடப்படும்.
*இதன்படி, இயற்பியல், வேதியியலில், 100 மதிப்பெண் மற்றும் கணிதத்தில், 100 மதிப்பெண் என, மொத்தம், 200க்கு, 'கட் - ஆப்' கணக்கிடப்படுகிறது.




1 Comments:

  1. To;
    TNPSC - Examinations Department
    Chennai.

    sub: TNPSC Group-ll Exam date change Request reg.


    Respected Sir,

    This month more than students go for writing the National Elegible Test(NET) coming last weak Sunday (29.06.2014). At a same(Date) time you will conduct for the Group -ll exam. so we could not able to attend the group-ll exam on the same date(29.06.2014),so please may be change the date most possible favorable to us.

    kindly asked to you, conceded for the change of the exam date favour to us.

    Thanking you, BY
    Educator

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive