கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிமாணவர்களுக்கு மொத்தம் 123 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. புதிய
கல்வியாண்டு உதயமாகியுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை 2014-15ம்
கல்வியாண்டுக்கான காலண்டர் தயாரித்துள்ளது.
ஜூன் 2 முதல், 2015 ஏப்., 30 வரையிலான 333 நாட்களில், தேர்வு நாட்களுடன் சேர்த்து, 210 நாட்கள் பள்ளி செயல்படும்; 123 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இம்மாதம் சனி, ஞாயிறு தினங்கள் தவிர, 21 நாட்கள் பள்ளி செயல்படும்; ஜூலை 22; ஆகஸ்ட் 19 நாட்கள் பள்ளி செயல்படும், செப்., 17ல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு, 6 முதல் ஒன்பதாம் வகுப்பினருக்கு முதல் பருவத்தேர்வு துவங்கும்; அம்மாதம் 22ல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புக்கு முதல் பருவத்தேர்வு; 26ல் தேர்வு முடிந்து, 27 முதல் காலாண்டு விடுமுறை. ஒன்பதுநாட்கள் விடுமுறைக்கு பின், அக்., 6ல் பள்ளிகள் திறக்கப்படும்; இம்மாதம் 19 நாட்கள் பள்ளி செயல்படும்.நவ., மாதம் 19 நாட்கள் பள்ளி செயல்படும். டிச., 12ல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு; 6முதல் ஒன்பதாம் வகுப்புக்கு இரண்டாம் பருவத்தேர்வு துவங்கும்; தேர்வு முடிந்து,24ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை; ஆங்கில வருட பிறப்பு உட்பட ஒன்பது நாட்கள் விடுமுறைக்குபின், ஜன., 2ல் பள்ளி திறக்கப்படும்; இம்மாதம் 18 நாட்கள் பள்ளி செயல்படும்.பிப்., மாதம், சனி, ஞாயிறு விடுமுறை தவிர 20 நாட்கள்; மார்ச் மாதம் 22 நாட்கள் பள்ளி செயல்படும்.
ஏப்., 10ல் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு துவங்கும்; ஏப்., 23 முதல், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வுவிடுமுறை அளிக்கப்படும்.2014-15 கல்வியாண்டில், மொத்தம் 210 நாட்கள்; 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை; 24 நாட்கள் தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது; பள்ளியில் வகுப்பு நடத்த வேண்டிய நாட்கள் (உள்ளூர் விடுமுறை தவிர) 186 நாட்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு கல்வியாண்டில், 123 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும். பள்ளி கல்வித்துறை தயாரித்துள்ள இந்த காலண்டர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...