Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜூன் 11 தமிழகம் முழுவதும் கல்வி அலுவலகங்கள் முற்றுகை: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

           கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்க வலியுறுத்தியும் மாநில முழுவதும் ஜூன் 11 ல் கல்வி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
 
           இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 7) சென்னையில்தமிழக பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் சவால்கள்எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூக, பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த இட ஒதுக்கீட்டை மறுக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன
 
          இத்தகைய பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை முழுமையாக நடைபெறுவதை கல்வித் துறைகள் கண்காணிக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் மற்ற அம்சங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு பள்ளி வாரியாக கட்டணங்களை நிர்ணயித்து உள்ளது. இக்கட்டணங்களையே ஏழை நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் கட்ட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
 
           ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணங்களை குறைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் போராடி வருகிறது.இந்த நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் விருப்பம் போல் பல மடங்கு கூடுதலாக கட்டணங்களை வசூலிக்கின்றன. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் பிரிக்கேஜி வகுப்புகக்கு ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அதற்கு எந்தவிதமான ரசீதும் தருவதில்லை. இத்தகைய பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளின் கணக்குகளை கல்வித்துறை அதிகாரிகள் தணிக்கை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தாய் மொழியை கட்டாய பயிற்று மொழியாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், முழுமையான சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு குடிநீர், வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                இந்த தீர்மானங்களை வலியுறுத்தி ஜூன் 11 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். இப்போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி தலைமை தாங்கினார். ‘தமிழக பள்ளிக்கல்வி எதிர்நோக்கும் சவால்கள்என்ற தலைப்பில் கல்வியாளர் .சீ.ராஜகோபாலன், ‘கட்டாயக்கல்வி உரிமைச் சட்டமும், மறுக்கப்படும் கல்வி உரிமையும்என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சமஸ், ‘இந்திய கல்வியும், இருவேறு சமூகங்களும்எனும் தலைப்பில் பாடம் .நாராயணன், அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் பேசினர்.மாநிலத் துணைத்தலைவர்கள் வி.மாரியப்பன், .சரவணத்தமிழன், .பகத்சிங்தாஸ் ஆகியேர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். முன்னதாக தென்சென்னை மாவட்டச் செயலாளர் .ஆறுமுகம் வரவேற்றார். வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.சித்தார்த் நன்றி கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive