தமிழக சட்டப் பேரவை ஜூலை 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.""தமிழக
சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை ஜூலை 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு
பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்'' என்று பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.
ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். துறை வாரியான செலவினங்களுக்காக பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு மாதம் வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் (2014-15) தமிழக சட்டப்பேரவையில் பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரில் பட்ஜெட் பேரவையில் நிறைவேறியது.மக்களவைத் தேர்தல் நடைபெற்றதையொட்டி, ஒவ்வொரு துறைக்கும் தனியாக நிதி ஒதுக்குவதற்கான துணை மானியக் கோரிக்கைகளை பேரவையில் நிறைவேற்ற முடியவில்லை.இந் நிலையில், பேரவையின் அடுத்தக் கூட்டம் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத் தொடர் எத்தனை நாள்களுக்கு நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தொடர் பெரும்பாலும் ஒரு மாத காலம் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...