அடுத்த
கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் (முதல் முறையாக
பாடங்களையும் தேர்வு எழுத உள்ளவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்பு பழைய
பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள்
அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யாமல் இருந்தால் இப்போது
பதிவு செய்து கொள்ள வேண்டும்.அனைத்து தனித் தேர்வர்களும் நாளை முதல் 30ம்
தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்கள்
பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் ஒதுக்கீடு
செய்துள்ள பள்ளிகளுக்கு சென்று செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
பயிற்சி
வகுப்பில் 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே அடுத்த கல்வி
ஆண்டில் நடக்க உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத
அனுமதிக்கப்படுவார்கள். செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத
தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.அறிவியல் செய்முறை பயிற்சி
வகுப்புக்கான விண்ணப்பங்கள் ஷ்ஷ்ஷ்.tஸீபீரீமீ.வீஸீ என்ற இணைய தளத்தில் நாளை
முதல் 30ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதை இரண்டு
நகல்கள் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் 30ம் தேதிக்குள்
ஒப்படைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...