அகில இந்திய அளவில்
நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
தேர்வு பெற்ற, 1,122 பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு
பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று,
சாதனை படைத்தார்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட
உயர் பதவிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு, ஆண்டுதோறும், யு.பி.எஸ்.சி.,
(மத்திய பணியாளர் தேர்வாணையம்) போட்டித் தேர்வை நடத்துகிறது.
முதல்நிலைத் தேர்வு, பிரதானத்
தேர்வு, நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளில், சிவில் சர்வீஸ் தேர்வு
நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான தேர்வின், இறுதி முடிவை, யு.பி.எஸ்.சி.,
நேற்று மாலை வெளியிட்டது. தேசிய அளவில், பல்வேறு பணியிடங்களுக்கு, 1,122
பேர் தேர்வு பெற்றனர். தேசிய அளவில், கவுரவ் அகர்வால் என்ற இளைஞர்,
முதலிடம் பிடித்தார்.இறுதித் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 109 பேர்
தேர்வு பெற்று, சாதனை படைத்தனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், அகில இந்திய
அளவில், 45வது இடத்தையும், தமிழக அளவில், முதல் இடத்தையும் பிடித்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteVazhtukkal
ReplyDeletevaalthukal, nermaya irrunga.....
ReplyDelete