பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கி. வீரமணி அவர்கள் தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தனது சொந்தப்பணத்திலிருந்து ரூ.5000 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.
இவ்வருடமும் இதேபோல் நேற்று (06-06-2014) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கினார். இவ்விழாவில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ திரு.ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. பிரியதர்ஷினி, பள்ளி துணை ஆய்வாளர் திரு.தாமோதிரன், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அரசு பள்ளி மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தனது சொந்த பணத்தில் ஊக்கப்படுத்தி வரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், மாணவர்களுக்காக பல நலதிட்டங்களை செய்படுத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...