பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள்
அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது.
90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும்
மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரும்பாலான
மேல்நிலைப் பள்ளிகளில் அசல் மதிப்பெண் பட்டியல் இல்லாமல், இணையதளத்தில்
வெளியான மதிப்பெண் பட்டியல் நகலை வைத்து, மாணவர் சேர்க்கையை முடித்து
விட்டனர்.
வரும் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்பு துவங்கும் என,
அரசு மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் தெரிவித்துள்ளன. ஆனால், கோவை
மாவட்டத்தில் எங்கும் பிளஸ் 1 புத்தகங்கள் கிடைப்பதில்லை. தமிழ்நாடு
பாடநுால் கழகத்தில் விசாரித்தாலும் புத்தகம் எப்போது வரும் என்பதை உறுதியாக
தெரிவிப்பதில்லை. இதனால், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர், பழைய
புத்தக கடைகளில் தேடி வாங்கி வருகின்றனர்.
மாணவர்கள் கூறுகையில், "கோவையில் எந்த புத்தக
கடையிலும் பிளஸ் 1 பாட புத்தகங்கள் கிடைப்பதில்லை. மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளிகளில், நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே பிளஸ் 1 பாடங்கள்
நடத்துவர். அதன்பின், பிளஸ் 2 பாடங்கள் தான் நடத்தப்படும். நான்கு
மாதங்களுக்குத்தான் என்பதாலும், புதிய புத்தகங்கள் எங்கும்
கிடைக்காததாலும், பழைய புத்தகங்களை வாங்குகிறோம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...