குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்குஅளித்த
பேட்டி:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்த விஏஓ
தேர்வை எழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விஏஓ தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும்போது, குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறையே
பின்பற்றப்படும். அதாவது, தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்கள்
மற்றும் தர வரிசையைத் தெரிந்து கொள்ளும் வகையில் முடிவுகள் வெளியிடப்படும்.
இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்பதை அவர்களாகவே தெரிந்து கொள்ள முடியும். கடந்த முறை 5,566 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வு எழுத 14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...