Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG/TNPSC சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி
ஆசிரியர் = திருத்தக்கதேவர்
காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு சமயம் = சமணம்
பாவகை = விருத்தப்பா
பாடல்கள் = 3145 விருத்தங்கள்

சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்: மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்) இயற்கை தவம் முதல் விருத்தப்பா காப்பியம் சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி

ஆசிரியரின் வேறு பெயர்கள்: திருத்தகு முனிவர் திருத்தகு மகாமுனிவர் தேவர் ஆசிரியர்

குறிப்பு: திருத்தக்கதேவர் சோழ மரபினர்.
இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
சீவக சிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
இவர் நூலை அரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.

நூல் அமைப்பு: 13 இலம்பகம் 3145 பாடல்கள்
முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்

நூல் குறிப்பு: சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான். சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.

பொதுவான குறிப்பு:
சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.
கிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, "தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று" என கூறினார்.
ஜி.யு.போப் திருதக்கதேவரை "தமிழ் கவிஞர்களுள் இளவரசன்" எனப் புகழ்ந்துள்ளார்.

வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
கம்பர், "சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்" என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நச்சினார்கினியர்: இவர் சைவர். சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது. இவரை, "உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்" எனப் போற்றுவர்.
இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
இவர் "தமிழ்மல்லி நாதசூரி" எனப் போற்றப்படுவார்

மேற்கோள்:
இவ்வாறாகப் பிறப்பதுவோ
இதுவோ மன்னற்கு இயல் வேந்தே

மெய்வகை தெரிதல் தம்மை
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகை இன்றித்தேறல் காட்சி
ஐம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத்தேயாது
ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
இருவினையும் கழியும் என்றான்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive