Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG/TNPSC மணிமேகலை

மணிமேகலை
ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு அடிகள் = 4286 வரிகள்
காதைகள் = 30
பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
சமயம் = பௌத்தம்

நூலின் வேறு பெயர்கள்: மணிமேகலைத் துறவு முதல் சமயக் காப்பியம் அறக்காப்பியம் சீர்திருத்தக்காப்பியம் குறிக்கோள் காப்பியம் புரட்சிக்காப்பியம் சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம் கதை களஞ்சியக் காப்பியம் பசிப்பிணி மருத்துவக் காப்பியம் பசு போற்றும் காப்பியம் இயற்றமிழ்க் காப்பியம் துறவுக் காப்பியம்

ஆசிரியர் குறிப்பு:
மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
சாத்தன் என்பது இவரது இயற்பெயர் இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர். கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
இவரை, "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" எனப் போற்றுவர்.

நூல் குறிப்பு;
இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை. முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
முதல் காதை = விழாவறைக் காதை இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை
கதை மாந்தர்:
மணிமேகலையின் தோழி சுதமதி
புத்தத்துறவி அறவன அடிகள்
மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
மனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
கோவலனின் குலதெய்வம் மணிமேகலை

பொதுவான குறிப்புகள்:
இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை
இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல் பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை

சிலப்பதிகாரத்தின் இறுதியில் "மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
மணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.

கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.

திருவள்ளுவரை "பொய்யில் புலவன்" எனவும் திருக்குறளைப் "பொருளுறை" என்றும் முதலில் கூறிய காப்பியம்

மேற்கோள்:
வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை

கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்

பசிப்பிணி என்னும் பாவி
மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive