Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG /TNPSC சிலப்பதிகாரம்

 ஆசிரியர் = இளங்கோவடிகள்
காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
அடிகள் = 5001
காதைகள் = 30
காண்டங்கள் = 3
பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
சமயம் = சமணம்

உரைகள்:
அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
அடியார்க்கு நல்லாரின் உரை
ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை

ஆசிரியர் குறிப்பு:
பெயர் = இளங்கோவடிகள்
பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை

அண்ணன் = சேரன் செங்குட்டுவன்

இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.

நூலின் வேறு பெயர்கள்: தமிழின் முதல் காப்பியம் உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம் பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம் குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ) புதுமைக் காப்பியம் பொதுமைக் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் ஒருமைப்பாட்டுக் காப்பியம் தமிழ்த் தேசியக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் வரலாற்றுக் காப்பியம் போராட்ட காப்பியம் புரட்சிக்காப்பியம் சிறப்பதிகாரம்(உ.வே.சா) பைந்தமிழ் காப்பியம்

நூல் அமைப்பு:

காண்டங்கள் = 3(புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
காதைகள் = 30
முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
இறுதி காதை = வரந்தருகாதை

புகார் காண்டம்:
புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
பத்தாவது காதை = நாடுகாண் காதை

மதுரைக் காண்டம்:
மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
11வது காதை = காடுகாண் காதை
23வது காதை = கட்டுரைக் காதை

வஞ்சிக் காண்டம்: வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
24வது காதை = குன்றக்குரவை காதை
30வது காதை = வரந்தருகாதை


நூல் எழுந்த வரலாறு: மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர். சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார். சீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக" என வேண்டிக்கொண்டார். இளங்கோவடிகளும், "நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்" எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.

நூல் கூறும் மூன்று உண்மைகள்:
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்

கதை மாந்தர்கள்:
கோவலனின் தந்தை மாசாத்துவான்
கண்ணகியின் தந்தை மாநாய்கன்
கோவலனின் தோழன் மாடலன்
கண்ணகியின் தோழி தேவந்தி
மாதவியின் தோழி , வயந்தமாலை
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை

கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன் கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)

சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்

சிறப்புகள்: "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என பாரதியார் கூறுகிறார்.

"சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்........தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்" என கூறுகிறார் பாரதியார்.
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை" என்றார் பாரதியார்
"முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்" – மு.வரதராசனார்

பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்

மேற்கோள்: மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
காசறு விரையே, கரும்பே, தேனே
அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே

இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive