Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்

ஐம்பெரும்காப்பியங்கள்
 
"பொருட் தொடர்நிலைச் செய்யுள்", காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம்

காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும்.
ஐம்பெரும்காப்பியங்கள்:
ஐம்பெரும்காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்

ஐம்பெரும்காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர்(திருத்தணிகைஉலா)

சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர்
வளையாபதி = பெயர் தெரியவில்லை
குண்டலகேசி = நாதகுத்தனார்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.

சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி

புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி

சுத்தானந்த பாரதி: கவியோகி சுத்தானந்தபாரதி ஐம்பெரும்காப்பியங்களையும் அணிகலன்களாக உருவகிக்கிறார்.
காதொளிரும் குண்டலமும் கைக்குவளையாபதியும்
கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும் சிலம்பார்
இன்பப்போது ஒளிரும் திருவடியும்

ஐம்பெரும்காப்பியங்கள் அட்டவணை: நூல் சமயம் பாவகை ஆசிரியர் நூல் அமைப்பு

சிலப்பதிகாரம்
சமணம்
நிலைமண்டில ஆசிரியப்பா + கொச்சக கலிப்பா
இளங்கோவடிகள்
3 காண்டம், 30 காதை,
5001அடிகள்

மணிமேகலை
பௌத்தம் நிலைமண்டில ஆசிரியப்பா
சீத்தலைச் சாத்தனார்
30 காதை, 4755 வரிகள்

சீவகசிந்தாமணி
சமணம்
விருத்தம்
திருத்தக்கதேவர்
13 இலம்பகம், 3145 பாடல்கள்

வளையாபதி
சமணம் விருத்தம்
72 பாக்கள் கிடைத்துள்ளன

குண்டலகேசி
பௌத்தம்
விருத்தம்
நாதகுத்தனார்
224 பாடல்கள் கிடைத்துள்ளன
ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:

நூல் வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம்
தமிழின் முதல் காப்பியம் உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள் முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம் பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம் குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ) புதுமைக் காப்பியம் பொதுமைக் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் ஒருமைப்பாட்டுக் காப்பியம் தமிழ்த் தேசியக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் வரலாற்றுக் காப்பியம் போராட்ட காப்பியம் புரட்சிக்காப்பியம் சிறப்பதிகாரம்(உ.வே.சா) பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை
மணிமேகலைத் துறவு முதல் சமயக் காப்பியம் அறக்காப்பியம் சீர்திருத்தக்காப்பியம் குறிக்கோள் காப்பியம் புரட்சிக்காப்பியம் சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம் கதை களஞ்சியக் காப்பியம் பசிப்பிணி மருத்துவக் காப்பியம் பசு போற்றும் காப்பியம்

சீவக சிந்தாமணி
மணநூல் முக்திநூல் காமநூல் மறைநூல் முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்) இயற்கை தவம்

குண்டலகேசி

குண்டலகேசி விருத்தம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive