Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB PG TAMIL /தமிழ் இலக்கணம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் | வினா விடைகள் -
1. இலக்கிய இலக்கணங்கள் உள்ள மொழிகளில் உள்ள மூன்று வித அமைப்புகள் : தனிநிலை, ஒட்டுநிலை,உட்பிணைப்பு நிலை
2. தனிநிலை என்பது தனித்தே நிற்கும் சொற்கள். உதாரணம் : வா, போ, நட, உண், படி
3. ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி =அறிந்தான், அறிஞன்
4. உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது.
5. உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
6. உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
7. இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
8. பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
9. பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். 10. உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
11. அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
12. தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
13. தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
14. ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
15.சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு. 16. சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
17. வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
18. சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
19. சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
20. வல்லினம் - க, ச,ட, த, ப, ற
21. மெல்லினம் - ங, ஞ, ண, ந, ம, ன 22. இடையினம் - ய, ர, ல, வ, ழ, ள
23. மொழி முதல் எழுத்துக்கள் - க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
24. மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் - ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
25. மொழி இறுதி எழுத்துக்கள் - ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
26. இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை - க், ங், ச், ட், த், ப், ற்
27. ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும். 28. மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
29. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
30. மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
31. போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
32. சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
33. சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி. 34. சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
35. தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் :
கல், கலம், கன்னல்
36. ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம்.
உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
37. எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
38. குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
39. நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
40. மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் - அரை மாத்திரை அளவு
41. மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
42. குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு 43. ஆய்த எழுத்துகளுக்கு - கால் மாத்திரை அளவு
44. ஐகார எழுத்துக்கு - 1 மாத்திரை அளவு
45. எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
46. அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை.
அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
47. அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல். 48. அளபெடை இரு வகைப்படும். அவை - உயிர் அளபெடை, ஒற்றளபெடை
49. உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
50. செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் அழைக்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive