வருடம் 2004
அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
ஒரு நாள் காலை வழக்கம் போல் சக ரயில் நண்பர்களுடன் சந்தோஷமாக அரட்டை அடித்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கையில் நாங்கள் பயணம் செய்து வந்த ரயில் ஜங்க்ஷனில் நின்று மீண்டும் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது வேகமெடுக்கத் துவங்கிய ரயிலினை ஓடிப்பிடித்து, ஒரு போலீஸ்காரர் எங்கள் பெட்டியில் ஏற வந்தார். எங்கள் பெட்டியில் படியருகே நின்றவர்களும் அவருக்கு கை கொடுத்து பெட்டியின் உள்ளே இழுத்து கொண்டனர்.
அவர் ஏறி முடிக்கவும் ரயில் முழு வேகமெடுக்கவும் சரியாக இருந்தது. இது போல் வேறு ஒருவர் ஓடும் ரயிலில் ஏறியிருந்தால் எங்களின் நண்பர்கள் உட்பட அனைவருமே அறிவுரை என்ற பெயரில் கேவலமாக திட்டுவதை பலமுறை பார்த்து இருக்கிறேன். ஆனால் இவரோ போலீஸ்காரர்! அதனால் மிக லேசான குரலில் அறிவுரையாக மட்டுமே ஒரு சிலர் பேசினர்.
அப்போது தான் அவரை பார்த்தேன். வயது 50 இருக்கலாம். சற்று மாநிறத்திலும், கிரேடு 3 தொப்பையுடனும், சாதாரண மீசையை வைத்துக்கொண்டும் இருந்தார். ஓடி வந்து ஏறியதில் அவர் மூச்சு வாங்கியபடி இருந்தார். நான் எழுந்துகொண்டு ”எனது இருக்கையில் உட்காருங்கள்” என்றேன். அவரோ தான் உட்கார்ந்து கொண்டு சைகையாலேயே என்னையும் உட்காரச் செய்தார். இருப்பினும் அவருக்கு மூச்சு வாங்கி கொண்டே இருந்தது. உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்தது. இரண்டு நிமிடம் கடந்த நிலையில் என் மீது சாய்ந்து கொண்டார். அவர் ஓய்வெடுத்துக்கொள்ளட்டும், என நான் நினைத்தகொண்டிருந்த போது அப்படியே சுய நினைவின்றி எனது மடியில் மயங்கி விழுந்தார்.
நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். எனதருகில் இருந்தவர்கள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சட்டை பட்டன்களை கழட்டி ஆசுவாசப்படுத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு பெரியவர் வந்து அவரை தொட்டு பார்த்து ”ஹார்ட் அட்டாக் போல இருக்கு” என கூறினார். அதற்குள் அடுத்த ஜங்ஷன் வரவே அனைவரும் சேர்ந்து அவரை இறக்கி நடைபாதையில் உள்ள ஒரு மேடையில் படுக்க வைத்தோம். நான் ஓடிச் சென்று அந்த ஜங்ஷனில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் விஷயத்தை கூறினேன். அவர் வந்து பார்த்து ”போயிடுச்சு” என்று சாதாரணமாக கூறினார்.
அதே நேரம் நாங்கள் பயணித்த ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அனைத்து பயணிகளும் ஏறிக்கொண்டனர். சக நண்பர்களும் ஏறிக்கொண்டனர். நான் என்ன செய்வது என தெறியாமல் விழிக்க அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ”போப்பா! ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்றோம்!, உன் ரயில் கிளம்புது பார்.” என்றார்.
நான் மெதுவாக கிளம்பிய ரயிலை பார்த்தேன். நண்பர்கள் வந்து ஏறுமாறு கத்தினார்கள். எனது மடியிலேயே உயிர் துறந்த யாரோ ஒரு மனிதனையும் பார்த்தேன். ஸ்டேஷன் மாஸ்டரையும் பார்த்தேன். ”எப்படியாவது இவரை காப்பாத்துங்கள் சார்” என்று கூறிக்கொண்டே ஓடிச் சென்று ரயிலில் ஏறி விட்டேன். எனது பெட்டியே அமைதியாக இருந்தது. ”அந்த போலீஸ்காரருக்கும் என்னைப் போல் ஒரு மகனோ அல்லது மகளோ இருந்திருக்கலாம்! அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆனவர்களோ!, இல்லையோ! வீடு கட்ட வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்திருப்பாரோ இல்லையோ!” என எத்தனையோ வருத்தங்கள் எனது மனதில். ஆனால் நான் ரயிலை விட்டு இறங்கி அவருடனே இருந்து அவர் குடும்பத்திற்கு தகவல் கூறியிருக்கலாமோ! என்று என் மீதே எனக்கு கோபம். ஆனால் என்ன செய்ய?
வருடம் 2014
டெட் தேர்வினை மிக கடினமாக படித்து எழுதினேன். 89 மதிப்பெண் எடுத்து தோல்வியுற்றேன். என்னுடன் ஒன்றாக குரூப் ஸ்டடி செய்த நண்பன்(?) 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் அவனுக்கு தான் என்ன மரியாதை! ஏதோ வேலையே கிடைத்து விட்டது போல! எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்றவர்கள் எங்களிடம் பேச்சை சிறிது குறைத்துக்கொண்டார்கள். அவர்களின் கண்களில் முதலமைச்சர் கையால் பணி ஆணை பெறும் இறுமாப்பு தெரிந்தது. மீண்டும் முயற்சி செய்தால் நாங்கள் இதை விட அதிக மதிப்பெண் நிச்சயம் பெறுவோம்!. ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் அடுத்த தேர்வு வரை வீட்டில் உள்ளவர்களையும், இந்த சமூகத்திலும் நாங்கள் ஏதோ முட்டாள்கள் போல சித்தரிக்கப்படுவதை எவ்வாறு தாங்கிக்கொள்வது என்ற பயம் தான் எங்கள் கண்களில் தெரிந்தது.
யார் செய்த புண்ணியமோ! மதிப்பெண் தளர்வு கிடைத்து இன்று நாங்களும் தேர்ச்சி பெற்று விட்டோம்! பணி இப்போது கிடைக்கிறது (அல்லது) பிறகு கிடைக்கிறது, கிடைக்கும் போது கிடைக்கட்டும். ஆனால் இப்போது நாங்களும் தகுதி பெற்று விட்டோம்! இந்த ஒன்றே இப்போதைக்கு போதும். நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டிலின் படி ஓரளவிற்று நல்ல வெயிட்டேஜ் இருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆனால் 2012 ல் தேர்வெழுதியவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதற்கு முந்தைய 10 தேர்வுகளுக்கா மதிப்பெண் தளர்வு கேட்டார்கள்? ஒரே ஒரு தேர்வு மட்டும் தானே. 76000 பேர் தேர்ச்சி பெறும்போது மேலும் ஒரு 25000 பேர் தேர்ச்சி பெறுவதால் பெரிதாக என்ன நடந்து விடப்போகிறது. தேர்ச்சி பெற்றவர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் வெயிட்டேஜ் கிடைக்கும் போது இவர்களும் தான் வரட்டுமே. இலங்கையில் சகோதரன் இறந்தால் அதற்கு போராடக்கூடாது. அது அடுத்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயல். அதேபோல் நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சிப்பது தவறு. இங்கு விமர்சிக்க வில்லை. இந்த தமிழக அரசு அவர்களுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கினால் இதே நீதிமன்றம் ”அரசின் கொள்கை முடிவில் தலையிடாது” என அப்போதும் ஒதுங்கியிருக்கும். பாவம்! 2012ல் தேர்வெழுதிய எங்கள் சகோதர சகோதரிகள்! தேர்ச்சி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ”அடுத்த தேர்வுக்கு இப்போதிருந்தே படி!” என இறுமாப்பில் தயவு செய்து இவர்களை திட்டாதீர்கள்!
எங்கள் ரயில் கிளம்பி விட்டது! எனது மடியில் உயிர் விட்ட யாரோ முகம் தெரியாத போலீஸ்காரரை பற்றிய வருத்தம் தற்போதும் எனக்கு உள்ளது.
எங்கள் ரயில் கிளம்பி விட்டது! ஆனால் 2012 ல் தேர்வெழுதிய என் நண்பர்களை நினைத்து அழுவதை தவிர நான் வேறு என்ன செய்து விட முடியும். எங்களைப்போல அவர்களுக்கும் நீதி கிடைக்கட்டுமே! என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்!..
அழுதுகொண்டே, வேகமெடுத்த எங்களுக்கான ரயிலில் ஏறிக்கொள்கிறோம்!
இறைவா! இவர்களையும் காப்பாற்றி விடு! Please...
கட்டுரையாளர்: திரு. சிந்தி
Wonderful article. You are not only a good teacher. But also an excellent advisor, able administrator and creative judge.
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் ஆன எனக்கும் ஆசைதான் .அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என.
DeleteAbove article is very nice comparison picturising the pain of tet 2012 relaxation missed candidates.
Deletevery interesting sir idhu pola niraiya eluthungal by your student and sister from vadavalli
ReplyDeleteVanakkam...Sinthi
ReplyDeleteUngaluda muthal katturai ungaluda manithaabimanathai velipaduthukirathu.....Aana tet 2012 kum relaxation koduthirukkanumnu solldrathu entha vithathil niyayam enpathu puriya villai....Tet 2012 First examla pass panna mudiyathavanga...Tet 2012 second examla yavathu pass panni irukkanum...ippa tet 2013 avangalukku 3 chance...Itulayavathu avanga highest mark edukka try panni irukkanum... Naan tet First layum 85 Secondlayum 85 koduma enna na ippayum 85. ithu ennoda mistake... melum innoru unmai enna na pass panninathila namakku thaan kavam kurayum...ippa naama padura kastam avanga pada thevai illa...avanga adutha tet or TNPSC ku padikka aarambichitaanga...aana namba naala mudiyalaye....pass panninavangala vida pass pannathavanga adutha tet la nalla mark eduppaanga...avangalukku thaan veri athigama irukkum..Munnadi 85 mark eduthu porathaala entha payanum illa avanga latea vanthaalum latesta varuvaanga....
Yes it is correct nan tet2013 la pass panni job money ellameh pochi enoda thanambiggai kana poiduchi daily oru result daily oru announcement nanga enna pavam seithom nanga than pavamnal ippo above82vum intha list irukiranga ene politician ku exam kidaiyatha, collector aganumnal avalu exam eluthanum teacher aganumnal exam eluthanum first ella political partieskum g.k. Test vaikanum
DeleteExellent article
ReplyDeleteKavithai
ReplyDeleteIt is not kavithai. It's a pain of your friends. This can be felt only by kind hearted people.
DeleteSuper friend, you are a good teacher.we won't hesitate others.i would like to vote for your article.Every teacher should like to follow her thought.
ReplyDeleteSuper. I am also 89 in 2012 TET. But kadavul punniyathala ippo unga train la nanum yeritten. Payanam than neendu kondirukkirathu serum idam than varave illa.
ReplyDeleteReply me frnds.mathsku total vacancy ethanai?
ReplyDeletenearly 1300
Deletemy new weitage is 63.8 Tamil major bc there is any chance for me to get job
ReplyDeleteNo chance
DeleteChance illenu solla mudiyaathu...irukkalaam athigamana posting potta sirr
Deletemy new weitage is 63.8 Tamil major bc there is any chance for me to get job
ReplyDeleteDear Friend Sinthi,
ReplyDeletei wont comment for any page.but this is our life u r showing here. enakum asinga patta anubavam undu. nammai padaitha Eraivan nam pondravarhalin kanneerai kandu erukirar. yellarum suya nalama dhan erukanga.yellarukum job security mukiyam,yellarukum money thevai, yellarukum family a nalla nilamaiku kondu varnumnu dhan think pandranga. but adha karanama vachu MANIDHABIMAANAM ndra oru vishyatha marakuranga.yellarum manidharhal dhan, yellarukum sandhosham,kashtam rendum mari mari dhan varum nu yosikama thannai patriya sindhanailaye erukanga. yellarukum oru request MANIDHABIMAANAM yendra ondrai nam maanavarhaliku karpika maraka kudadhu.MANIDHABIMAANAthodu vaalvadhil oru nimmadhi erukuradhu. ningal andha police sir ku yedhuvum pannavillai yendra yennam vendam. avar police. so kandipaha thahaval arivipadhil erundhu yellam sariyaha nadandhirukum. pesuvadhil pirar kayapadamal parthukolvadhae namakku alahu enbadhai endha article kaatuhuradhu.Evalvu heart melt ahi pesa karanam En madiyil muham theriyadha oru Kulandhai-in UYIR pirindhirukiradhu.. i dont know that baby is male or female. till i'm in tears for that unknown baby.....i'm TEARING AND LONGING like A MOTHER for that baby.Apo varai matravarhal pirachinai enaku seithi dhan,erakka pada matume therium. adhan pinbu ovoru sethium en anubavamahiradhu.
kanneerudan..
Console
Hi frds,my new weitage is 70.15.maths bc female any chance for me.pls anybody tell me howmany vacancies
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசகோதரியே,
ReplyDeleteஉங்களின் கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக உள்ளது,
உங்களிடம் திறமை உள்ளது, முயற்சி செய்தால் நிச்சயமாக
பெரிய கதாசிரியர் ஆகலாம். வாழ்த்துக்கள்.....
Kadavuluku kuda un alavirku aanavam irukadu........... matravar unarvai madhikaa vittalum midhikadhey
Delete12th std, theory la 20 practical la 50 edutha pass nu irunthathu..
ReplyDeleteAppuram theory la 40 prac la 30 nu irunthathu.. bt now theory la 30 prac la 40 nu irukku.. athukkaga ovvoru time rules change pannumpothum previous yr 12th students case pottuttaa irunthanga..? So 2012 ku relax ketkarathu entha vidhathil niyayam
Unai pol manithabimanam ullavargal anudhabamey engalin aarudhal sindhi...........thanks
ReplyDeletemy new weitage 65.27for paper 2.in paper 1=68.22.english ,mbc,any chance for job.pls replie to any body.by vanju
ReplyDeleteivla katha pesareengale enthu +2 and ug mark kammi, tet 93 mark, may be tetla 86 or 87 or 89 edatha oru candidate +2 and ug mark athigama irunthu job kedachu, enai pola irukkravangalukku kedaikkalana naanga thaguthiyana teacer illaya ennaa paara patcham ithu, 10 or 15 yearku munnadi padicha padipai ellam calculate pani job podrathu thappu illaya, neenga aadapadra oorukku mattum unga train ponumnu nenaikrathu mutttal thanam illaya, ithu thaguthi thervu endral yarukkum job podathenga pass pannavangalukku mattum trb exam or seniority vachu job kudunga, illa ithe tet exam job podaratha iruntha tet mark base panni job podanum, ithu unga kathaila varathu illa bocz unga train ungalukkaga mattum odra stupid cm ottra train
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteSir kovichikaatheenga....intha maathri katturai kathainu pottu yen sir ventha punla vela paaichureebga.....Important news vera payanulla news niraya irukke...!
ReplyDeleteIdu katturai alla engal kadharal........
Deleteellaam ok. ithula trainla payanam seira (pass panni age kooduthala 32 kku meal irukkuravanga ungakooda (age 29 kku keela) pottipoda mudiyaathu. avankalukku utkaara muthalla idam tharalaamla................by pass panniyum age seniority ulloar.
ReplyDeleteAGE SENIORITY or EMPLOYMENT SENIORITY kku 5 MARK KUDUKKALAAM.
ReplyDeleteஅன்பு சகோதரர் வெங்கட்,
ReplyDeleteஇது கதை அல்ல. நான் அனுபவித்த வேதனை. எனது அனுபவம்!. தற்போதும் நம் சகோதரர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனை. ரோட்டில் அடிபட்டு ரத்தம் சிந்தி கொண்டிருப்பவர்களை பார்த்து ” ரோட்டை பார்த்து கிராஸ் பண்ணியிருக்கலாம், எல்லாம் கொழுப்பு” என்று அந்த நேரத்திலும் திட்டி விட்டு செல்பவர்களை பார்த்திருக்கிறேன்!. உதவமுடியாவிட்டாலும் அவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் ஒரு நிமிடம் அழுவது கூட இங்கு கேவலமாக பார்க்கப்படுகிறதே!. அடிபட்டு கீழே விழுந்து கிடப்பவன் உங்களின் இரத்த உறவு என்றாலும் இப்படித்தான் திட்டிவிட்டு போவீர்களா!...
மனித நேயத்தை இழந்துவிட்டு எதை பெற ஓடுகிறோம்! எதை கற்றுத்தர போகிறோம்!
what about Pg any news please
ReplyDeletehello sinthi.
ReplyDeleteippa neenga yethukku unga real lifela nadantha sambavathyum tetyum compare panni eluthuneenga...atha naala thaan kathanu soldrom . "அழுதுகொண்டே, வேகமெடுத்த
எங்களுக்கான ரயிலில்
ஏறிக்கொள்கிறோம்!
இறைவா! இவர்களையும்
காப்பாற்றி விடு! Please..." ithil enna varutham therivitheera illa taataa therivitheera
Kaludhaiku teriyuma karpura vaasana.........
DeleteUnala purinjika mudilana silenta vittutu poven....
According to the TET mark basis appointment only the solution for all the problems for only this time.Because there are so many knots that cannot be loosen.Next time onwards the proper way can be followed
ReplyDelete+2 KKU 15 MARK.....DTED KKU 20 MARK..... TET KKU 60 MARK.. AGE SENIORITY or EMPLOYMENT SENIORITY kku 5 MARK KUDUKKALAAM. (TOTEL 100)
ReplyDelete+2 KKU 15 MARK.....DTED KKU 20 MARK..... TET KKU 60 MARK.. AGE SENIORITY or EMPLOYMENT SENIORITY kku 5 MARK KUDUKKALAAM. (TOTEL 100) ithu before 20110 kku mattum.
ReplyDeletesorry................
ReplyDelete+2 KKU 15 MARK.....DTED KKU 20 MARK..... TET KKU 60 MARK.. AGE SENIORITY or EMPLOYMENT SENIORITY kku 5 MARK KUDUKKALAAM. (TOTEL 100) .............................ithu before 2010 kku mattum.
5/02/2014 8:19 am
Seniorty ku mark kudunganu soldreenga cv la weightage calculate pandra idathila employnment card edum submit pannino ma illa tet applicationla employnment reg. Number thavira seniority date yethum fill panninoma...yosinga... Seniority mark tharanumnu sonna seniority date avasiyam. Athukaaga marupadiyum ellathukittayum antha thagaval vaangi entry panni....saathiyam illa....paarkalaam wait pannuvom
ReplyDeletehello sir/madam , parapatcham illama neeyayama sollanumuna trb pola tet mark matumae pothum govt should think already CV mudithavargal position and next election
ReplyDeletevery nice article
ReplyDeleteI work as teacher by passing tet exam in 2012.....don't comment about the first tet candidates.....may be some candidates might have changed their character after getting the job not everyone...I didn't expect the job,I thought it will be eligible test not to give job so I haven't prepared that first exam,,,,among the 1500candidates my friend passed in first tet itself that made me to do the hardwork in the supplementary exam,,now I have an ulcer and government job too.....definitely everyone will get their chance make it use my dear friends
ReplyDeleteஎங்கள் வேதனை உங்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. ஆனால் அம்மா எங்களுக்கு மதிப்பெண் கொடுக்க மாட்டேங்கிறாங்க நாங்க என்ன பாவம் செய்தோம் 2012 ம் அதே தேர்வுதானே
ReplyDeleteஉங்கள் மனிதாபிமான பண்பு போற்றத்தக்கது தான்.
ReplyDeleteஉங்களை தகுதிப்படுத்திக்கொள்ளதான் தோ்வு நடத்தியது. அரசு அதில் உங்களால் தகுதி பெற இயலவில்லை என்பதால் தான் உங்களுடைய தகுதியை அரசு குறைத்துள்ளது. அதில் வெற்றி பெற்றதாக நினைக்கின்றீா்கள். அதைப்போல அனைத்து தகுதி தோ்விலும் அனைவரையும் தகுதி இழக்க வைப்பதில் என்ன நியாயம் நண்பா? இக்கருத்து எப்படி இருக்கிறது என்றால் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்கும் பழமொழி போல் இருக்கிறது.
இப்படிக்கு
தகுதியான ஆசிாியா் வேண்டுவோா் சங்கம்.
Tet la u got above 90 mark u r good teacher ya..
DeleteNaangal appadi solla varala entha oru announcement CV mudicha piraku velai ipa kidichidum nu naanfa ninukkumpothu 5%relaxation endra perula yarukkum posting Villa irukkura nilamaiya than solrom.idhiai tet examku munnadi solli irundha naanga trb I yavadhu engal vasapadithiruppom pa
DeleteDear friends, I have got 87 in the last year 2012 exam, and scored 111 this year, I completed +2 , U.G in the years 94-98, now i';m approaching 40age, and i have 15 yrs experience in teaching, why still we people above 35 are not considere d , the trb should realise the difference between the exam systems following now and past, during 90's getting 350in X, 750 in XII was considered to be a very marks, and in colleges also no internal system was followed, then how can the trb compare us with the younger people. we are in a very distressed mentality, is it fair, pls, consider us also a human being.
ReplyDeleteSir i welcome ur comments. Sir arasial vadhikaluku tet pola oru exam vaithu parkanum
DeleteVery good knot .ur became a very gud teacher.
ReplyDeletewhether you want the true justice in 2012 TN - TET exam.please contact us.
ReplyDeletesivagnanam - +919944246797
saravanan - +919842366268
siva kumar +919095363202
kumar - +919865385952
very good article thanks sindhi engalukaga kanneer vitatharku
ReplyDeletedaily we are waiting for good news , but no more information about the candidates who have passed last tet, ayyo, mudiyallaiye enru theerum intha pain
ReplyDeleteRespected trb people we request u to take good solution as early as possible, pls. let us live , because we are dying every minute , we hope u can understand our feelings. we came across so many struggles, got above 82(87) last tet, scored 111 this exam , still no happiness, now a days it is not tough to get more than 1000, but during our period 90's that was only a dream, we had no internal system also, but now we are standing in the queue along with our students, what a pity it is! no words to explain our condition. pls, consider atleast our teaching experience.my major English My new weightage 68.8, and my friends conditions are still more pathetic than me, we dont know what do to. so we request our C.M. mam to consider this matter and take immediate steps, i am sharing this not only for my sake, it is in the favour of all people who are above 35,
ReplyDeleteசிந்தி நன்றாக எல்லோரையும் சிந்திக்க வைத்து விட்டாய்.ஆளே இல்லாத கடைக்கு யாருக்கு டீன் ஆற்றிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கும் நிலைக்கு தற்போது அரசு பள்ளிகளின் நிலையிருக்க NET,SET போல வருங்காலத்தில் TET உம் ஆகிவிடும் அபாய சூழல் உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.அரசுப்பள்ளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் புகலிடம் என்பதிலிருந்து விடுபட்டு அனைவருக்குமான இடமாக விளங்கினாலொழிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று என்ன புண்ணியம் ?
ReplyDelete
ReplyDeletei can able to answer to 2013 unsuceesful candidate .............
but 2012 unsuceesful candidate, after reading this article ......
what to say ........
angel thomas