மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என,
முதல்வர் ஜெ., அறிவித்தார்.அதன்படி, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு
பயிற்சியும் நடத்தப்பட்டது. இத்தேர்வு, நாளை (மே 21) காலை, 10:00 மணி
முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. கல்வி துறை உயர் அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள
மையங்களில், கண்பார்வையற்ற, 1,215 பேர்; உடல் ஊனமுற்ற 3,477 பேர் என,
மொத்தம், 4,692 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க,
ஒவ்வொருமாவட்டத்திற்கும், கல்வி துறை இணை இயக்குனர் தகுதியிலான, அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...